சிவகார்த்திகேயன் மீது அதிருப்தியில் இருக்கும் கமல்.. எதையும் கண்டு கொள்ளாமல் சூட்டிங்கில் இருக்கும் பிரின்ஸ்

Sivakarthikeyan in SK21: தற்போது சிவகார்த்திகேயனுடைய இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக அடிபட்டு வருகிறது. இருந்தாலும் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21வது படத்தில் கமிட் ஆயிருக்கிறார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமலஹாசன் உருவாக்கி வருகிறார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதல் முறையாக சாய்பல்லவி இணைந்திருக்கிறார்.

இவர்களுடைய காம்பினேஷன் சூப்பராக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. ஆரம்பத்தில் காஷ்மீரில் படப்பிடிப்பு 60 நாட்கள் மட்டுமே என்று ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்ட நாட்களையும் தாண்டி கிட்டத்தட்ட 90 நாட்களாக படப்பிடிப்பு வைக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

இதனால் ஏற்கனவே போட்டு வைத்த பட்ஜெட்டையும் தாண்டி ரொம்ப அதிகமாக செலவு எகிறி விட்டது. இதை தெரிந்த கமல் ரொம்பவே அதிருப்தி ஆகிவிட்டார். காரணம் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாவீரன் படத்திற்கு அதிக வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 89 கோடி மட்டுமே வசூலை பெற்று கலவையான விமர்சனங்களை கிடைத்தது. அப்படி இருக்கும் சூழலில் தற்போது SK21 படத்தில் அதிக பட்ஜெட்டை செலவழித்தால் வசூல் எந்த மாதிரியாக வரும் என்று தெரியாததால் கமல் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறார். அத்துடன் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் சொல்லும் படியாக மக்களிடம் எடுபடாமல் போய்விட்டது.

அதனால் இனி ஒவ்வொன்றையும் பார்த்து கவனமாக பண்ண வேண்டும் என்று படக்குழுக்கு கண்டிஷனாக கமல் கூறி இருக்கிறார். இதனை அடுத்து சூட்டிங் சென்னையில் உள்ள திருவேற்காடு மற்றும் மாங்காடு போன்ற இடங்களில் வைக்கலாம் என்று அதற்கு ஏற்ற மாதிரி செட்டுகள் போட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த இடங்களில் தேவையான படப்பிடிப்பை முடித்த பிறகு மறுபடியும் காஷ்மீரில் 10 நாள் சூட்டிங் நடைபெற இருக்கிறது. இதனால் கமல் இப்படத்திற்கு போட்ட பட்ஜெட்டையும் தாண்டி இப்போதே தாறுமாறாக அதிகரித்து விட்டதால் இயக்குனரிடம் கொஞ்சம் கடுமையாகவே கமல் நடந்து கொள்கிறாராம். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் பெயர் வேற சோசியல் மீடியாவில் டேமேஜ் ஆகி வருவதால் படத்தின் வசூல் அடிபடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.