ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கௌதமேனனை கெட்ட வார்த்தையில் பொளக்கும் விக்ரம்.. இணையத்தை மிரட்டும் CSK துருவ நட்சத்திரம்

Dhruva Natchathiram Trailer: கௌதம் மேனன் இயக்கத்தில் பல வருடங்களாக கிடப்பில் கிடந்த துருவ நட்சத்திரம் தற்போது தூசி தட்டப்பட்டுள்ளது. விக்ரம், பார்த்திபன், விநாயகன், சிம்ரன், ராதிகா, ரித்து வர்மா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே இதன் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புதிய ட்ரெய்லரும் மிரட்டலாக இருக்கிறது. அதிலும் ஆரம்பத்திலேயே மும்பையில் நடக்கும் தாக்குதல்கள் தான் காட்டப்படுகிறது. அதை தொடர்ந்து ஒரே சிந்தனை ஒரே நோக்கம் உள்ள 11 பேர் ஒன்று சேர்ந்து எந்த சட்டம் மற்றும் விதிகளுக்கும் கட்டுப்படாமல் பேஸ்மெண்ட் என்ற டீமை உருவாக்குகின்றனர்.

அதன் முக்கிய புள்ளியாக இருக்கும் விக்ரம் பல சாகச வேலைகளை செய்கிறார். அதிலும் படு ஸ்டைலிஷ் ஆக அவர் போடும் சண்டை காட்சிகள் அனைத்தும் அனல் பறக்கிறது. இப்படியாக வெளிவந்துள்ள இந்த ட்ரெய்லரில் ஜெயிலர் பட வர்மனும் இடம்பெற்று படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி இருக்கிறார்.

இவர்களுடன் கௌதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதில் சச்சின், தோனி மாதிரி வரணும்னா இன்டர்நேஷனல் லெவல்ல விளையாடுறதுக்கு கிரவுண்டுக்கு வரணும் என்பது போன்ற வசனங்களும் தீப்பொறியாய் இருக்கிறது. இறுதியாக நான் வரேண்டா என விக்ரம் சொல்லும் டயலாக் உடன் ட்ரெய்லர் முடிவடைகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு இது சிறப்பான ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆதித்த கரிகாலனாக மிரட்டிய விக்ரம் தங்கலான் மூலம் புது அவதாரம் எடுத்த நிலையில் இந்த துருவ நட்சத்திரமும் அவருக்கான வெற்றியை கொடுக்க இருக்கிறது.

- Advertisement -

Trending News