Leo Screen torn: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த லியோ திரைப்படம் அனைத்து திரையரங்களிலும் ஆரவாரமாக வெற்றி முழக்கத்தை நோக்கி வருகிறது. இதில் என்ன தான் எதிர்மறையான கருத்துக்கள் வந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி விஜய் அவருடைய நடிப்பை தெறிக்க விட்டிருக்கிறார். அத்துடன் வசூல் அளவிலும் நஷ்டம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் லாபத்தை நோக்கி கொண்டு தான் வருகிறது.
அந்த வகையில் எப்படியும் இவர்கள் எதிர்பார்த்தபடி ஆயிரம் கோடி வசூலை தொடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் செய்து விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது. அப்படி அமெரிக்காவில் உள்ள திரையரங்கில் லியோ படம் ஓடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது.
அதாவது அங்குள்ள திரையரங்களின் உரிமையாளருக்கும், விநியோகத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் லியோ படம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே புகுந்த டிஸ்ட்ரிபியூட்டர் கோபத்தில் ஸ்கிரீனை கிழித்திருக்கிறார். இதனால் அங்கே படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பயத்தில் பாதியிலேயே வெளியே போய் விட்டார்கள்.
இதனை தொடர்ந்து அந்த தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதையெல்லாம் பார்க்கும் பொழுது விஜய்க்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனைகள் சோதனைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. படம் ஆரம்பித்து வெளியிடுவது வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டே வருகிறார்.
அதுவும் சமீப காலமாக விஜய் படங்களுக்கு மட்டும் இந்த மாதிரியான பிரச்சனைகள் வருகிறது. இதையெல்லாம் கடந்து ஒரு வழியாக படத்தை வெளியிட்டால் அதிலும் ஏழரை கூட்டும் விதமாக ஏதாவது ஒரு ரூபத்தில் மாட்டி விடுகிறார். இப்படித்தான் லியோ படத்தின் ட்ரெய்லரை திரையரங்குகளில் வெளியிட்ட பொழுது ரசிகர்கள் செய்த அட்ராசிட்டியால் தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
இப்பொழுது நாடு விட்டு நாடு படம் ரிலீஸ் ஆனாலும் அதிலும் ஏதாவது ஒரு சோதனை ஏற்பட்டு விடுகிறது. இருந்தாலும் இதையெல்லாம் கடந்து நடிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தி ரசிகர்களை திருப்திப்படுத்தி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதனாலதான் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி இவரால் நடிக்க முடிகிறது.