Rajini and MGR: சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் பல படங்களில் நடித்துவிட்டு போயிருக்கிறார்கள். அப்படி போனவர்களில் ஒரு சில நடிகர்களை மட்டும் தான் நாம் நினைவில் வைத்துக் கொள்கிறோம். அந்த அளவிற்கு அவர்களுடைய நடிப்பும் எதார்த்தமான வாழ்க்கையும் மக்களிடம் நின்னு பேசி வருகிறது. அந்த வகையில் காலத்துக்கும் அழிக்க முடியாத அளவிற்கு தமிழ் சினிமாவில் பெருமை சேர்த்த நடிகர் தான் எம்ஜிஆர்.
அப்படிப்பட்ட இவருடைய ஒரு படத்தில் ஏகப்பட்ட பிரச்சனையை ஏற்படுத்திருக்கிறார் ஒருவர். அதாவது முன்னணி நடிகராக பல படங்களில் நடித்துக் வந்த இவர் கட்சியிலும் ஆர்வம் காட்டி வந்தார். அப்பொழுது இவர் திமுக கட்சியில் உறுப்பினராக இருந்தார். அதே கட்சியில் கருணாநிதியும் இருந்தார்.
அந்த நேரத்தில் இவர்களுக்குள் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கிறது. அத்துடன் கட்சியின் தலைவராகவும் கருணாநிதி பதவி ஏற்றார். இதனால் 1973 ஆம் ஆண்டு திமுக கட்சியில் இருந்து எம்ஜிஆர் விலகி விட்டார். அப்பொழுது இவர் நடிப்பில் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் படம் அனைத்து திரையரங்குகளிலும் ரிலீசானது.
இந்த படம் எம்ஜிஆர்க்கு மிகப்பெரிய வரவேற்பை மக்களிடம் வாங்கிக் கொடுத்தது. இதனால் இந்த படத்தை தொடர்ந்து மக்கள் பார்க்க கூடாது என்று அப்பொழுது கட்சியில் தலைவராக இருந்த கருணாநிதி பல இடைஞ்சல்களை செய்திருக்கிறார். அதாவது உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்க்க விடாமல் தடுப்பதற்காக சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் பவர் கட் பண்ணி இருக்கிறார்.
இப்படி தொடர்ந்து அந்த படங்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பிரச்சனை கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். இதே மாதிரி ரஜினிக்கும் ஒரு படத்தில் தடங்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாமலை படத்தை மக்கள் யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக ஜெயலலிதா பல வழிகளில் குடைச்சல் கொடுத்து இருக்கிறார்.
அதாவது சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்களில் முன் ரோடு சீரமைப்பு வேலையை ஆரம்பித்து மக்களை அந்த வழியாக வரவிடாமல் தடுத்து மாற்று பாதை என ஆரம்பித்து பல வழிகளில் படத்தை பார்க்க விடாமல் டைவர்ட் பண்ணியிருக்கிறார். இப்படி ரஜினி மற்றும் எம்ஜிஆர் மீது எதிர்ப்பை காட்டி பழி வாங்குவதற்காக ரெண்டு தலைகள் உச்சகட்ட அராஜகத்தை செய்திருக்கிறார்கள்.