காதலும் கை கூடல, கல்யாணமும் ஆகல.. மன அழுத்தத்தில் குடிக்கு அடிமையான ஹீரோ

நடிக்க வந்த புதிதிலேயே மாஸ் காட்டி தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் தான் அந்த நடிகர். அதை தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்த அவர் தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவருக்கு சோதனை காலம் தொடங்கியது.

அவர் நடித்த படங்கள் அனைத்தும் மண்ணை கவ்விய நிலையில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் கடும் சிக்கலை சந்தித்தார். அதிலும் நீண்ட நாள் காதலியை அவர் பிரேக் அப் செய்து பிரிந்தது அவரை கடும் மன அழுத்தத்திற்கு கொண்டு சென்று விட்டதாம். இதற்கு அவர்தான் முக்கிய காரணமாக இருந்தாலும் அதிலிருந்து அவர் மீண்டு வர கஷ்டப்பட்டார் என்பது தான் உண்மை.

ஏனென்றால் காதலி தன் பக்கம் ஆதரவாக இல்லாமல் போனது தான் இந்த பிரிவுக்கு காரணமாக கிசுகிசுக்கப்படுகிறது. அதை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நடிகர் திடீரென திருமணத்திற்கு தயாரானார். ஆனால் அதுவும் ஒரு ஐட்டம் நடிகையால் தடைபட்டு போனது.

இப்படி திருமணத்திற்காக நடிகர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சொதப்பிய நிலையில் இப்போது அவர் குடிக்கு அடிமையாகி விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்து வருகிறது. எப்போதுமே நடிகர் பார்ட்டி சரக்கு என்று பிசியாக தான் இருப்பார். ஆனால் இப்போது அளவுக்கு அதிகமாக வெயிட் போடும் அளவுக்கு அவர் குடிக்கிறாராம்.

அதனாலேயே இப்போது அவரை பார்த்தால் வயதானவர் போல் இருப்பதாக சிலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். அந்த அளவுக்கு நடிகர் எசகு பிசகாக வீங்கி போய் இருக்கிறார். இப்படி மன அழுத்தத்தில் இருக்கும் நடிகரை பார்த்து அவருடைய பெற்றோர்களும் பரிதவித்து போகிறார்கள்.

அதனாலேயே அவர் மீண்டும் திருமண முயற்சியில் இறங்கியுள்ளாராம். அந்த வகையில் எப்போது வேண்டுமானாலும் இந்த அறிவிப்பு வெளிவரலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம். எது எப்படியோ முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த நடிகர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலாவது கொஞ்சம் அடங்கி இருப்பாரா என்று பார்க்கலாம் என பலரும் சத்தம் இல்லாமல் கிசுகிசுத்து வருகின்றனர்.