Pandian Stores Season 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இத்தொடரின் இரண்டாவது அத்தியாயம் தொடங்க இருக்கிறது. சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்ட் 2 தொடரின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் அண்ணன் மற்றும் தம்பி பாசத்தை அடிப்படையாக வைத்து வெளியானது. இந்த சூழலில் இரண்டாவது அத்தியாயத்தில் மூத்த அண்ணனாக நடித்த மூர்த்தி அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் அவரது மனைவியாக நடிகை நிரோஷா நடிக்கிறார்.
இந்நிலையில் அவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோர் உள்ளனர். இவ்வாறு கலகலப்பான தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆனாலும் இந்த தொடரின் டிஆர்பியை தக்க வைப்பதற்காக மூர்த்தியை தவிர மற்றொரு பிரபலத்தையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இறக்க இருக்கிறார்கள்.
அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம் ஓரளவு டிஆர்பியை தக்கவைக்க காரணமாக இருந்தது இரண்டாவது மருமகள் மீனா தான். மிகவும் யதார்த்தமாக அந்த கதாபாத்திரத்தில் ஒன்றி இருந்தார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்திலும் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.
இதிலும் மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமாவிடம் ரசிகர்கள் நேரடியாகவே கேட்டிருந்தனர். ஆனால் இதுவரை அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்த ஹேமா தனது சமூக வலைதள பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் நடிக்க இருப்பதை உறுதி செய்து இருக்கிறார். அதுவும் மீனா என்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருக்கிறாராம்.
இந்த செய்தி ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் அவரது கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. மேலும் டிஆர்பியை தக்க வைப்பதற்காக ஹேமாவை விடாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலும் விஜய் டிவி லாக் செய்து வைத்திருக்கிறது.