சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

லியோ முத்த சர்ச்சை.. மிஷ்கின் கொடுத்துள்ள விளக்கம்

Leo-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் சமீபத்தில் வெளியான லியோ படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இந்நிலையில் லியோ படத்தில் பல காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதில் ஒன்று விஜய் மற்றும் திரிஷா இடையேயான லிப்லாக் காட்சி கூட இணையத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. ஏனென்றால் சமீபகாலமாக விஜய் இதுபோன்ற ரொமான்ஸ் காட்சியில் நடிக்காத நிலையில் லியோ படத்தில் இவ்வாறு நடித்துள்ளது, அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்துகிறது. அதன் பிறகு இது கதைக்கு அவசியம் என்று அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அப்போது விஜய்க்கு மிஷ்கின் முத்தம் கொடுத்தது பற்றி பலராலும் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதுகுறித்து இயக்குனரே இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது விஜய்யின் யூத் படம் மூலம் தான் தன்னுடைய சினிமாவின் ஆரம்ப புள்ளியாக இருந்ததாகவும் அப்போது இருந்தே அவருடன் நல்ல பழக்கம் என்றும் கூறியிருந்தார்.

Also Read : என் கண் முன்னாடியே நிக்காத ஓடிடு.. மொத்த பேரையும் கெடுத்துட்ட, வெளுத்து விட்ட லியோ தாஸ்

விஜய் ஒரு மகா கலைஞன் தான். ஆகையால் அவரின் கையில் முத்தமிட்டது எனக்கொரு தப்பாக தெரியவில்லை என மிஸ்கின் கூறி இருக்கிறார். மேலும் நான் மனதில் பட்டதை மட்டுமே செய்யக்கூடியவன். சினிமாவில் படம் எடுக்கும் போது தான் அறிவின் மூலம் செயல்பட வேண்டும் என்று மிஸ்கின் கூடியிருக்கிறார்.

மேலும் மிஸ்கின் இப்போது இயக்குனராக பணியாற்றுவதை காட்டிலும் நடிகனாக பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் ஏதோ ஒரு காரணத்தினால் தடைப்பட்டு கொண்டே போயிருக்கிறது.

இந்த சூழலில் மாவீரன், லியோ என மிஸ்கினின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி அவருக்கு இப்போது வாய்ப்புகள் அதிகம் வர ஆரம்பித்திருக்கிறது. இப்போது லியோ சக்ஸஸ் மீட்டில் சர்ச்சையில் சிக்கியது போல் ஏதாவது ஏடாகூடமாக பேசி அவ்வப்போது தனது பெயரை கெடுத்துக்கொள்ளும் படி சில சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்.

Also Read : லியோ படத்தின் மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.? நம்பர் ஒன் யாருன்னு நிரூபித்த முத்துவேல் பாண்டியன்

Trending News