Baakhiyalakshmi Serial: விஜய் டிவியில் பிரைம் டைமில் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பாக்யாவுக்கு அடுத்தடுத்து பெரிய சிக்கல் ஒன்று காத்திருக்கிறது. அதாவது புதிய ஆர்டர் ஒன்றுக்காக எழில் மற்றும் பாக்யா இருவரும் ஒரு நிறுவனத்தை நாடி செல்கிறார்கள்.
அப்போது அங்கு உள்ள அப்ளிகேஷன் வாங்குவதற்கு பத்தாயிரம் கட்டணம் கேட்கப்படுகிறது. இதனால் முதலில் பாக்யா ஆச்சரியம் அடைந்தாலும் பிறகு இதுவும் ஒரு முதலீடு தான் என்று மனதை தேற்றிக்கொண்டு தான் வீட்டுக்கு செலவுக்காக வைத்திருந்த பணத்தை கொடுத்து அப்ளிகேஷன் வாங்குகிறார்.
அதன் பிறகு தான் தெரிகிறது இந்த ஆர்டரை வாங்க வேண்டும் என்றால் கிட்டதட்ட ஒரு லட்சம் ரூபாய் முன் பணம் கட்ட வேண்டும் என்பது. இதனால் எழில் மற்றும் பாக்யா இருவரும் ஆடி போகிறார்கள். இந்த காண்ட்ராக்ட் பற்றிய தகவலை பழனிச்சாமி மூலம் தான் பாக்யா பெற்றிருந்தார். ஆகையால் அவரை சந்தித்து இந்த விஷயத்தை கலந்து ஆலோசிக்கிறார்.
ஆனால் பழனிச்சாமி தானே அந்த ஒரு லட்சம் பணத்தை தருவதாக சொல்லியும் பாக்யா மறுத்து விடுகிறார். இதை அடுத்து இந்த விஷயம் குறித்து வீட்டில் பாக்யா சொல்லும்போது கோபி கலாய்த்து சிரிக்கிறார். அதன் பிறகு ஒரு லட்சம் பணத்திற்காக மசாலா பொடி அரைக்கும் இயந்திரத்தை விற்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.
மேலும் அப்படி இப்படி என்று கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏற்பாடு செய்வதற்கான வழியில் பாக்யா இறங்கி இருக்கிறார். ஆனால் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் கதையாக தான் அவரது நிலைமை இருக்கிறது. ஏனென்றால் ஒரு லட்சம் பணம் செலுத்தியும் அந்த காண்ட்ராக்ட் பாக்யா கைவசம் செல்லுமா என்பது ஒரு சந்தேகத்துடன் தான் இருந்து வருகிறது.