திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விக்ரம் இல்லன்னா விஷ்ணு.. குள்ளநரி தந்திரத்தை காட்டும் பூர்ணிமா

Biggboss 7: பிக்பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா இருவரும் செய்யும் அக்கப்போர் கொஞ்ச நெஞ்சம் கிடையாது. மற்ற போட்டியாளர்களுடன் இவர்களுக்கு அப்படி என்னதான் வாய்க்கா தகராறோ தெரியவில்லை. யாரையாவது காலி செய்ய திட்டம் தீட்டி கொண்டிருப்பதே இவர்களின் பொழுதுபோக்காக இருக்கிறது.

அந்த வகையில் மாயா ஒரு பக்கம் விசித்ராவை காலி செய்யும் வேலையில் இறங்கி இருக்கிறார். அதே சமயம் பூர்ணிமா விஷ்ணுவை டார்கெட் செய்திருக்கிறார். ஏற்கனவே விஷ்ணு அவருக்கு காதல் தூது விட்டபோது இவர் அதை அசால்டாக தட்டி விட்டார்.

ஆனால் போட்டியாளர்கள் குறைய குறைய பூர்ணிமாவுக்கு விஷ்ணுவின் மீது கவனம் திரும்பி இருக்கிறது. எப்படியாவது அவரை காலி செய்து வெளியேற்ற வேண்டும் என இப்போது ஒரு காதல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். அதற்கான ப்ரோமோ தான் தற்போது வெளிவந்து வைரலாகி வருகிறது.

Also read: கெட்டப்ப மாத்துனாலும் கேரக்டர் மாற மாட்டேங்குதே.. மொத்த வன்மத்தையும் கக்கும் பூர்ணிமா

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சரவண விக்ரம் மீது பூர்ணிமாவுக்கு ஒரு க்ரஷ் இருந்ததை நாம் பார்த்தோம். அது மட்டுமின்றி சதா நேரமும் அவரை ஒட்டிக்கொண்டே அவர் தெரிந்து கொண்டிருந்தார். இதற்கு முக்கிய காரணம் எங்கே அவர் கடுமையான போட்டியாளராக மாறி விடுவாரோ என்ற எண்ணம் தான்.

ஆனால் அவர் ஒரு மிச்சர் பார்ட்டி என்று தெரிந்த பின்பு பூர்ணிமா விக்ரமை விட்டு விலகினார். அதைத் தொடர்ந்து விஷ்ணுவுக்கு தன் மேல் ஒரு இது இருப்பதை பூர்ணிமா அவருக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டார். இதற்கு விஷ்ணு பலியாவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும் பெண்ணின் காதல் வலையில் சிக்கி சின்னாபின்னமான கதையும் உண்டு. அதைத்தான் தற்போது பூர்ணிமா அரங்கேற்ற தொடங்கியுள்ளார். அந்த வகையில் அவருடைய இந்த குள்ளநரித்தனம் எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது விரைவில் தெரிந்து விடும்.

Also read: விசித்ரா மண்டையை கழுவும் மாயா.. என்ன உருட்டுனாலும் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல

Trending News