80-களில் ரஜினியின் சம்பளத்தை உயர்த்திய ரீமேக் படம்.. ஆனாலும் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்

Rajini’s First Remake Film: 72 வயதிலும் எனர்ஜி குறையாமல் சூப்பர் ஸ்டார் ஆக மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் ரஜினியின் ஆரம்ப காலம் அவ்வளவு சுலபமாக அமையவில்லை. தொடக்கத்தில் வில்லனாக நடித்த ரஜினி, அதன் பின் ஹிந்தி ரீமேக் படத்தில் தான் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டி மார்க்கெட் மதிப்பையும் கூட்டிக் கொண்டார்.

ஆனால் இந்தப் படத்தின் மூலம் கோடிக்கணக்கில் வசூலை அள்ள நினைத்த தயாரிப்பாளர் தான் மோசம் போனார். 70களின் இறுதிவரை தமிழ் சினிமாவில் ஹிந்தி படங்களின் தாக்கமும், ஹிந்தி பாடல்களின் தாக்கவும் நிறையவே இருந்தன. இதனால் ஹிந்தி படத்தை ரீமேக் செய்து தமிழ் படங்களை தயாரித்து கல்லா கட்டினார்கள்.

அதிலும் ‘ரீமேக்  படங்களின் நாயகன்’ என்ற கொண்டாடப்பட்ட நடிகரும் தயாரிப்பாளருமான கே. பாலாஜி, 1975 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘தீவார்’ என்ற ஹிந்தி படத்தை தமிழில் ‘தீ’ என ரஜினியை வைத்து எடுத்தார்.

ரஜினியை மாஸ் ஹீரோவாக காட்டிய முதல் படம்

இந்த படத்தை ரஜினியின் பில்லா படத்தை இயக்கிய கிருஷ்ணமூர்த்தி தான் இயக்கினார். வழக்கமான அண்ணன்- தம்பி கதையாக இல்லாமல் இன்னும் பல விஷயங்களை இந்த படத்தில் சேர்த்து இருந்தனர். தொழிலாளர் பிரச்சனை, போராட்டம், முதலாளித்துவ சிந்தனைகள் என விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் ரஜினி செம ஸ்டைலா நடிச்சு ‘மாஸ் ஹீரோ’ என பெயர் எடுத்தார்.

இந்த படத்தின் மூலம் ரஜினியின் சம்பளமும் அதிகமானது. ஆனால் படத்தை எடுத்த தயாரிப்பாளர் கே பாலாஜி எதிர்பார்த்த அளவு வசூல் பெற முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். ஆனால் ஹிந்தியில் வெளியான ‘தீவார்’ படம் அப்பவே 6 கோடியை அள்ளியதால், ‘தீ’ படம் குறைந்தது 10 கோடியை வசூலிக்கும் என பாலாஜி மனக்கோட்டை கட்டினார். ஆனால் இந்தப் படம் அண்டர் ஃபிளாப் ஆனதால் நம்பி மோசம் போனார்.