10 வருஷம் கழிச்சு விஜய் சேதுபதி மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி.. 4 பேரை வளர்த்துவிட எடுக்கும் ரிஸ்க்

Vijay Sethupathi: விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்கள் எதார்த்தமாகவும், குடும்பத்துடன் பார்க்கும் படியான கதையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனாலயே சினிமாவிற்குள் நுழைந்த கொஞ்சம் வருடத்திலேயே மக்கள் செல்வன் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார். அப்படிப்பட்ட இவர், கிடைக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தையும் நடிக்கும் பொருட்டாக வில்லன் கேரக்டரிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதில் என்னதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு தற்போது தட்டு தடுமாறி கொண்டு வருகிறார். ஏனென்றால் இவரை ஒரு கொடூர வில்லனாக பார்த்த பின்பு ஹீரோ என்ற லெவலுக்கு வச்சு பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறார். இருந்தாலும் விட்ட இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தற்போது ஹீரோவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இப்பொழுது மேரி கிறிஸ்மஸ், விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மகாராஜா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஆரம்பத்தில் இவருக்கு சினிமா கேரியரில் டர்னிங் பாயிண்டாக அமைந்த படம் சூது கவ்வும். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக வசூலை கொடுத்து தூக்கி விட்டது. அதற்கு என்னதான் விஜய் சேதுபதியின் நடிப்பு காரணமாக இருந்தாலும் கூட நடித்தவர்களும் முக்கிய காரணம்.

Also read: சஞ்சய் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க காரணம்.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

அதனால் மறுபடியும் இந்தக் கூட்டணியுடன் விஜய் சேதுபதி ஒரு படம் பண்ணலாம் என்ற யோசனையில் இருக்கிறார். அதற்காக சூது கவ்வும் படத்தில் நடித்த பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் மற்றும் அசோக் செல்வன் இவர்கள் கூட்டணியில் மறுபடியும் ஒரு கதையை ரெடி பண்ணுங்கள் என்று சூது கவ்வும் படத்தை எடுத்த நலன் குமாரசாமி இயக்குனரிடம் பேசி இருக்கிறார்.

அத்துடன் இந்த நான்கு நடிகர்களுக்குமே பெரிசாக சொல்லும் படியான கேரியர் எதுவும் சரியாக அமையாமல் இருக்கிறது. அதனால் இப்பொழுது இவர்களை கை தூக்கி விட்டால் அடுத்தடுத்து அவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்பதில் நம்பிக்கை வைத்து பெரிய ரிஸ்க் உடன் விஜய் சேதுபதி களம் இறங்குகிறார்.

அந்த வகையில் மறுபடியும் சூது கவ்வும் பட மாதிரி விஜய் சேதுபதி நடிப்பில் படம் தயாராக போகிறது. இதற்கிடையில் விஜய் சேதுபதிக்கு வில்லன் கதாபாத்திரம் ஏதாவது வந்தால் அதை தற்போது வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என முடிவில் இருக்கிறார். அதற்கு காரணம் வில்லன் கேரக்டரில் நடித்தால் ஹீரோ வாய்ப்பு வராமல் போய்விடும் என்ற பயத்தினால். என்னதான் பணம் அதிகமாக கிடைத்தாலும் ஹீரோ இமேஜை இவரால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

Also read: 2 கோடி போட்டு 35 கோடி வசூலை பார்த்த விஜய் சேதுபதி.. கம்மி காசுல பெத்த லாபம் பார்த்த 5 படங்கள்