ஹவுஸ் மேட்ஸ்சை கிழித்து தொங்க போடும் அனன்யா.. தரமான சம்பவங்களுடன் பிக்பாஸ்

Ananya re enter Bigg boss: பிக்பாஸ் வீக் எண்ட் எவிக்சனில் பிராவோ மற்றும் அக்ஷயாவை கழட்டிவிட்டபின் வைல்ட் card என்ட்ரி யாக விஜய்வர்மா மற்றும் அனன்யாவை களம் இறக்கி இருந்தனர். தன்னை content பார்ட்னராக சேர்த்துக்கொண்ட பூர்ணிமாவை ரோஸ்ட் போட்டவுடன் போட்டார் கமல். அதையும் தாண்டி ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும்  தரமாக வச்சுசெஞ்சார் அனன்யா.

வைல்ட் கார்டு என்ட்ரி என்று  இரண்டாவதாக காலடி எடுத்து வைத்த அனன்யா  நான் கொஞ்சம் அமைதியான பொண்ணு ஆனா இனி அமைதியா விளையாட மாட்டேன் அது எல்லாத்தையும் இங்கே வச்சுட்டு கேமுக்கு என்ன தேவையோ அதை செய்யப் போறேன் என்று அதிரடியாக களம் இறங்கினார்.

இறங்கிய வேகத்தில் பிக்பாஸ் கொடுக்கிற ஒரு டைட்டில் பட்டம் கொடுக்கிற டாஸ்க் கொடுத்தார். செகண்ட் ஜான்ஸ்ச மிஸ் பண்ண கூடாது என உறுதியோடு கம்பேக் கொடுத்து இருக்கும் அனன்யா பின் விளைவுகள் பற்றி சற்றும் யோசிக்காமல் கடகடவென முன்னேறிக் கொண்டிருந்தார்.

விசித்ரா மேல கொஞ்சம் காண்டுல இருந்திருப்பாங்க போல உங்க ஏஜ் வச்சு எமோஷனலா எல்லாரையும் லாக் பண்றீங்க என விசித்ராவுக்கு நரி பட்டம் கொடுத்தார். உங்களுடைய விஷம் அதிகமாக பரவிக் கொண்டே இருக்கிறது என்று மாயாக்கு விஷபாட்டில் என்றும். ஐசு மற்றும் வினுஷாவின் மேட்டரை வைத்து  நிக்சனை முதல்ல நீ ஒன்ன பாத்துக்க டா நிக்ஸன் என்று கிரிஞ்சை மாட்டி விட்டார். பூர்ணிமாவை இங்கே உள்ளது அங்கேயும் அங்க உள்ளத இங்கேயும் கூறும் விதமாக தவளை என்றார்.

அடிக்கடி வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லும் கூல் சுரேஷ் க்கு கொசு என்றும்  அக்ஷயா போன சோகத்தில் இருந்த விக்ரமுக்கு மிக்சர் என்று கூறி அவரை சோக கடலில் தள்ளி இருப்பார். அர்ச்சனாக்கு சொம்பு, மணியை பூமர் என்றவுடன் பூர்ணிமாவுக்கு வந்த சந்தோசம் இருக்கே அளப்பரியது. ரவீனாக்கு puppet என்றும் விஷ்ணு பர்சனல் செக்யூரிட்டி என்றும் தினேஷுக்கு தேள் என்றும்  சில பாசிட்டிவான விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்.

எது எப்படியோ அனன்யாவின்  என்ட்ரி பல தரமான சம்பவங்கள் பண்ண காத்துக் கொண்டிருக்கிறது.