10 கிலோ உடல் எடையை குறைத்து ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அஜித்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

Ajith in New Look: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தின் சூட்டிங் மிக மும்மரமாக வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கிடையில் படப்பிடிப்பு ஆரம்பிக்காமல் கிட்டதட்ட பத்து மாதங்களாக இழுத்து அடித்தது. அதற்கு காரணம் கதைக்கேற்ப அவருடைய உடல் எடையை குறைப்பதற்காகத் தான்.

அந்த வகையில் 10 கிலோ வரை எடையை குறைத்து இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் தான் வைரல் ஆகி வருகிறது. காரணம் இதில் அஜித்தை பார்ப்பதற்கு கம்பேக் கொடுப்பது போல் பழைய அஜித் எப்படி அம்சமாக இருந்தாரோ, அதே மாதிரி இளம் ஹீரோவுக்கான அனைத்து லுக்கும் இவரிடம் இருக்கும் வகையில் தற்போது மாறி இருக்கிறார்.

இத்தனை காலங்களாக இந்த அஜித்தை பார்ப்பதற்கு தான் பலரும் ஏங்கிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு படு ஜோராக இருக்கிறார். முக்கியமாக முகத்தில் அவ்வளவு ஒரு தெளிவு, தாடியை ட்ரீம் செய்து தொப்பையை குறைத்துக் கொண்டு, அழகும் குறையாமல் எப்படி பத்து வருஷத்துக்கு முன் கேஸ்வலாக இருந்தாரோ அதே மாதிரி திரும்ப வந்திருக்கிறார்.

இது கண்டிப்பா விடாமுயற்சி படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கப் போகிறது. அதற்கேற்ற மாதிரி இந்த கெட்டப்புக்கு கதை இருப்பதால் படம் நிச்சயமாக ரசிகர்கள் தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு ஹிட் அடிக்க போகிறது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக இருக்கும் என்பதற்கு ஏற்ப அஜித்தின் எண்டரி மாஸாக இருக்கிறது.

10 கிலோ உடல் எடையை குறைத்து இளம் ஹீரோவாக மாறிய அஜித்

ajith latest image
ajith latest image