Actress Tamannah: இப்போதெல்லாம் தமன்னாவின் பெயர் சோசியல் மீடியாவில் அதிகம் தென்படுகிறது. பாலிவுட் பக்கம் போய் ஓவர் கிளாமரில் நடித்தது முதல் வெப் சீரிஸ், காவாலா பாடல் என அவர் இப்போது மீண்டும் படு பிஸியாக மாறி இருக்கிறார். இதில் இவருடைய காதலும் ஒரு பக்கம் சர்ச்சை செய்தியாக மாறிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் இந்த ஜோடி அவ்வப்போது சில பார்ட்டிகளில் லிப் லாக், ஓவர் நெருக்கம் காட்டுவது என சோசியல் மீடியாக்களுக்கு புதுப்புது கன்டென்ட் தருகின்றனர்.
அதில் தற்போது சிக்கி இருக்கும் ஒரு போட்டோ பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது தமன்னா தன் காதலனுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியில் வரும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அப்படி என்ன அதில் இருக்கிறது என்று உற்று கவனித்தால் ஒரு விஷயமும் சிக்கி உள்ளது.
காதலனுடன் தமன்னா

அதாவது தமன்னா அந்த விழாவிற்கு படு கிளாமரான ஒரு உடையை அணிந்து வந்திருந்தார். அந்த விழா முடிந்து கிளம்பும் போது தமன்னா அரைகுறை ஆடையில் மீடியா கண்களில் மாட்டுவதை காதலன் விரும்பவில்லை. அதனாலேயே அவர் தன் கோட்டை கழட்டி தமன்னாவுக்கு கொடுத்திருக்கிறார்.
அதை அணிந்தபடி ஸ்டைலாக இருவரும் கைகோர்த்து வந்த போட்டோ தான் இப்போது ட்ரெண்ட் ஆகிறது. இது தெரியாத ரசிகர்கள் மாட்டிக்கிட்டீங்களே தமன்னா, அந்த அளவுக்கு தெளிவில்லாமல் இருக்கிறீர்களா என நக்கலாக கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
காதலனின் கோட்டை போட்டு போஸ் கொடுத்த தமன்னா
