திருட்டுத்தனமாக ஒன்னு சேர போகும் செந்தில் மீனா.. அப்பா மூஞ்சில் கரியை பூச போகும் கதிர்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2, மகன்களிடம் ஹிட்லர் மாதிரி நடந்து கொள்ளும் பாண்டியனுக்கு எதிராக ஒரு சம்பவம் நடக்கப் போகிறது. அதாவது காதலித்து கல்யாணம் பண்ணிய பாண்டியன் மட்டும் குடும்பம் குட்டியாக சந்தோசமாக வாழலாம். இதுவே இவருடைய மகன்களின் காதல் என்றதும் அதற்கு வில்லனாக மாறிவிட்டார்.

அதனால் தான் அப்பா சென்டிமெண்டை வைத்து மூத்த மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் வேறு வழியில்லாமல் காதலித்த பெண்ணை மறந்துவிட்டார். அந்தப் பெண்ணும் வேற ஒருவரை திருமணம் செய்து கொண்டது. இதே நிலைமையில் தான் இரண்டாவது மகன் செந்திலும் இருக்கிறார். எப்படியாவது காதலித்த மீனாவை கல்யாணம் பண்ண வேண்டும் என்று ஆசையுடன் சுற்றி வருகிறார்.

அதே நேரத்தில் தன் காதலித்த பெண்ணுடன் கல்யாணம் பண்ணி வையுங்கள் என்று அப்பாவிடம் தைரியமாக சொல்ல முடியாத அளவிற்கு தொடை நடுங்கியாக இருக்கிறார். இதற்கிடையில் கடைசி மகன் கதிர் மட்டும் அப்பா என்ன சொன்னாலும் பரவாயில்லை. நமக்கு என்ன தோணுதோ, அதை செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அதனால் செந்தில் காதலுக்கு பக்க பலமாக இருந்து சப்போர்ட் செய்கிறார்.

அந்த வகையில் மீனாவை வீட்டிற்கு தெரியாமல் கோவிலுக்கு வர சொல்லுகிறார். அதே நேரத்தில் செந்தில் மீனாவுக்கும் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக கல்யாணத்தை பண்ணுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் கதிர் பண்ணிவிட்டார். பிறகு கோயிலுக்கு வந்த செந்தில் மீனா மணமகன் மணமகள் கோலத்தில் வந்து விடுகிறார்கள்.

இவர்கள் திருமணம் கோவிலில் நடைபெறும் பொழுது அங்கே இவருடைய அப்பா பாண்டியனும் வந்துவிடுகிறார். இதற்கு மத்தியில் செந்தில் மீனா கல்யாணம் நடக்குமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் இவ்வளவு தூரம் வந்ததுக்கு பிறகு கண்டிப்பாக இவர்களுடைய திருமணத்தை கடைசி தம்பி கதிர் நடத்தி வைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

அத்துடன் செந்தில், மீனா கழுத்தில் தாலி கட்டும் போது சரியான நேரத்தில் பாண்டியனும் பார்த்து விடுவார். அதன் பிறகு தான் பூகம்பம் வெடிக்கப் போகிறது. அத்துடன் மீனா எப்படியும் மருமகளாக பாண்டியன் குடும்பத்திற்கு போய்விடுவார். போன பிறகுதான் பாண்டியனின் ஹிட்லர் அராஜகத்திற்கு ஒரு முடிவு கட்ட போகிறார். இதற்கிடையில் கதிரின் துணிச்சலான விஷயங்களை பார்க்கும் பொழுது சுவாரசியமாக இருக்கிறது.