பதான், ஜவானை ஓரம்கட்ட வரும் டன்கி.. கலர்ஃபுல்லாக வந்த மாஸ் ட்ரெய்லர்

Shan Rukh Khan Dunki Trailer: இந்த ஆண்டு பாலிவுட் சினிமாவையே தூக்கி நிறுத்திய படம் என்றால் ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் படங்கள் தான். ஷாருக்கான் ஒரு சில கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தாலும் கடந்த நான்கு வருடங்களாக அவரது நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் இருந்தது.

இந்த சூழலில் இந்த ஆண்டு ஷாருக்கானுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இதே ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் அடுத்த படம் ஒன்று வெளியாக இருக்கிறது. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் டன்கி என்ற படம் வெளியாகிறது.

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருக்கிறார். இந்நிலையில் டன்கி படத்தின் ட்ரெய்லர் ஒன்று இப்போது வெளியாகி இருக்கிறது. பதான் மற்றும் ஜவான் படங்கள் ஆக்சன் காட்சிகளுடன் வெளியான நிலையில் அதிலிருந்து வித்தியாசமாக டன்கி படம் இருக்கிறது.

அதாவது மிகவும் கலர்ஃபுல்லாக புத்துணர்ச்சி தரும் விதமாக தான் இந்த ட்ரெய்லர் இடம் பெற்றிருக்கிறது. மேலும் படத்தில் காமெடி, ரொமான்ஸ் மற்றும் ஆக்சன் என அனைத்தும் கலந்த ஒரு என்டர்டைன்மென்ட் படமாக டன்கி படம் உருவாகி இருக்கிறது. ஆகையால் இந்த படமும் கண்டிப்பாக 1000 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஷாருக்கான் இந்த படத்தில் மூலம் ஹட்ரிக் வெற்றியை அடிக்க இருக்கிறார். மேலும் இப்போதே இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில் டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் டன்கி படம் வெளியாக இருக்கிறது.