சினிமா செய்திகள்

கேரியர் ஒஸ்ட் படத்தை கொடுத்தவரை தாங்கும் விக்ரம்.. சியான் 63ல் மீண்டும் இணையும் கூட்டணி

சியான் 63 படத்தில் மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்.

By Arun · 06 டிசம்பர் 2023 · Updated 10 மே 2025
vikram-chiyaan-63

Chiyaan 63 Movie Update: சியான் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிக்காட்டி வருகிறார். இந்த நிலையில் விக்ரமின் 63-வது படத்தின் இயக்குனர் யார் என்பது தெரிய வந்துள்ளது.

சியான் 63 படத்தில் மீண்டும் விக்ரம் ரிஸ்க் எடுப்பது கொஞ்சம் கூட நியாயம் இல்லை என ரசிகர்கள் புலம்புகின்றனர். ஏனென்றால் தமிழ் சினிமாவில் டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் போன்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்துவை நம்பி விக்ரம், கோப்ரா என்ற படத்தில் நடித்தார்.

ஆனால் ரெண்டு தரமான படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து விக்ரமுக்கு கேரியர் ஒஸ்ட் படத்தை கொடுத்துவிட்டார். ஆனால் அந்த இயக்குநரை தாங்கி பிடிக்க வேண்டும் என்று சியான் 63 படத்தில் மீண்டும் விக்ரம், அஜய் ஞானமுத்து உடன் இணைகிறார்.

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்

இயக்குனர் அஜய் ஞானமுத்துக்கு மிகப்பெரிய அடையாளத்தை தந்தது டிமான்டிக் காலனி படம் தான். அதனால் இதன் இரண்டாம் பாகத்தை அவர் பாலிவுட்டில் இயக்கப் போகிறார். அதன் பின்பு சியான் 63 படத்தை எடுக்கும் முடிவில் இருக்கிறார்.

இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளாராம். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அல்லது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க போகின்றனர். இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.