வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

1000 கோடி வசூலுக்கு போட்ட அஸ்திவாரம்.. வெறிகொண்டு கே ஜி எஃப் கூட்டணி ஆடும் பேயாட்டம்

KGF Team in Big Plan for 1000 crores: கேஜிஎப் கூட்டணியுடன் சுமார் 400 கோடி பட்ஜெட் இல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் இல் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர் . அரியணைக்காக அடித்துக் கொள்ளும் இரு புத்திசாலி நண்பர்களான திருடர்கள் எதிரிகளாக மாறுவதே கதை என்கிறார் இயக்குனர்.

பல மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் கேஜிஎப் ஐ இறக்கி தன் வேறுபட்ட அணுகுமுறையும் கண்ணோட்டத்தையும் கூறி ரசிகர்களை சபாஷ் போட செய்திருப்பார் பிரசாந்த் நீல். அதேபோல் தான் அடுத்து இயக்கும் சலார் படத்தையும் வசூலில் 1000 கோடி அடித்தே தீர வேண்டும் என்று படத்தின் ஒவ்வொரு சீனையும் மெருகேற்றிக் உள்ளார்.

சலார் படத்தின் தெலுங்கு உரிமை மட்டுமே 182 கோடிக்கு மேல். எனில்  இயக்குனர் 1000 கோடி எதிர்பார்ப்பது தவறல்லவே. சமீபத்தில் வெளியான சலார் படத்தின் டிரைலர் வெளியான  சில மணி நேரத்திலேயே அதிக மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் சலார் பற்றிய எதிர்பார்ப்பு கூடி கொண்டே வருகையில்  டிசம்பர் 22 இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில்  வெளியாக உள்ளது.

Also read: 1000 கோடி வசூலை எதிர்பார்த்து வெளிவர உள்ள பிரம்மாண்டமான 6 படங்கள.. கங்குவாவை மிஞ்சுமா காந்தாரா!

படத்தின் டிரைலரை பார்க்கும்போது கேஜிஎப் போல் உள்ளது என்றாலும் இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்கள். ரசிகர்களை கே ஜி எஃப் ஐ எதிர்பார்த்து வராதீர்கள் சலார் முற்றிலும் வேறுபட்ட தரமான ஆக்சன் திரில்லர் படம் என்று கூறுகிறார்.

பாகுபலிக்கு பின் பிரபாஸின் ரசிகர்கள் அவரை மாஸாக காணவே விரும்புகின்றனர். மேலும் இப்படத்தில் பிரபாஸிற்கு மாஸ் காட்டுவதுடன் பிரித்திவிராஜின் தோற்றமோ வித்தியாசமாக மிரட்டும் வகையில் உள்ளது. டிரைலரில் காணப்பட்ட “நம் ரத்தத்திலேயே வயலன்ஸ் இருக்கு” என்பது போன்ற வசனங்கள் ரசிகர்களை தெறிக்க விடுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ உலக அளவில் வசூலில் 612 கோடியை வாரி குவித்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலரோ உலக அளவில் வசூலில் 650 கோடி குவித்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இந்த இரண்டையும் தாண்டி சலார் கண்டிப்பாக 800 கோடி முதல் 1000 கோடி வரை வசூலில் சாதனை படைக்கும் என்பது ஆச்சிரியப் படுவதிற்கில்லை.

Also read:  பிரபாஸ் கேஜிஎப் இயக்குனர் கூட்டணியில் இணைந்த கொடூர வில்லன்.. எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கிய சலார்</a

Trending News