ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குடும்பமா, குட்டியா.? பட்டு திருந்திய சமந்தாவின் அதிரடி ஆட்டம்

Actress Samantha: புகழின் உச்சியில் இருக்கும் போதே சமந்தா, அக்கினேனி குடும்பத்து வாரிசான நாக சைத்தன்யாவை காதலித்து கோலாகலமாக திருமணமும் செய்து கொண்டார். ஆனால் சுவற்றில் அடித்த பந்து போல அவர் திருமண வாழ்க்கையே வேண்டாம் என விவாகரத்து பெற்றார்.

அதைத்தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர் சமீபத்தில் உடல்நல பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்டார். இது சில எதிர்மறை கருத்துக்களுக்கும் ஆளானது. ஆனால் சில மாத மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வந்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் தேவரகொண்டா உடன் சமந்தா இணைந்து நடித்த குஷி நல்ல வரவேற்பு பெற்றது. அதில் அவர்களுடைய ஜோடி பொருத்தமும் ரசிக்கப்பட்டது. அதனாலேயே இந்த ஜோடி காதலிக்கிறார்கள் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் பேசப்பட்டது.

Also read: விவாகரத்துக்கு பின் நிஜ வாழ்க்கையில் 2 குழந்தைக்கு தாயாகும் சமந்தா.! வெறுத்துபோய் எடுத்த முடிவு

ஆனால் சமந்தாவோ காதலாவது கத்திரிக்காயாவது என தன் வேலையை பார்த்து வருகிறார். அதன்படி குஷி படத்திற்கு பிறகு எந்த படத்தையும் கமிட் செய்யாத சமந்தா தற்போது மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார்.

அதை அடுத்து தற்போது மும்பை பக்கம் சென்றுள்ள சமந்தா இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகி விட்டாராம். இன்னும் சிலரிடமும் கதைகளை கேட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. ஒரு தடவை காதல், கல்யாணம் என்று பட்டு திருந்திய சமந்தா இனி குழந்தையாவது, குட்டியாவது என நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி அதிரடி காண்பித்துள்ளார்.

Also read: தடையாக இருந்த திருமணத்திற்கு குட்பை.. சமந்தா, அமலாபால் வரிசையில் விவாகரத்துக்கு தயாரான ஹீரோயின்

Trending News