செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சூர்யாவுக்கு சிக்ஸ் பேக் ஆசையை தூண்டிய 2 ஜிம்பாடி நடிகர்கள்.. இருவரையும் ஓரம் கட்டி வரப்போகும் கங்குவா

Actor Suriya maintain six pack: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமான சூர்யா தற்போது சிறுத்தை சிவாவின் கங்குவாவில் பிஸியாக இருக்கிறார். பல வெற்றி படங்களை தந்துள்ள சூர்யா காக்க காக்க. வாரணம் ஆயிரம். ஏழாம் அறிவு போன்ற படங்களில் தனது சிக்ஸ் பேக்கை காமித்து ரசிகர்களை பிரமிக்க செய்தார்.

தினமும் இரண்டு மணி நேர உடற்பயிற்சி, அளவான காலை உணவு, மதியம் சிக்கனுடன் கூடிய சாதம், பழங்கள் என எடுத்துக் கொள்ளும் சூர்யா தன் உடல் எடை அதிகரிக்காதவாறு பார்த்துக் கொள்கிறார்.

தனக்கென தனி ட்ரெயினர் வைத்திருக்கும் சூர்யா, அவரின் அறிவுறுத்தலின் படியே உடல் எடையை  கூட்டவும் குறைக்கவும் செய்கிறார். அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ள கங்குவாவில் ஆறு வேடங்களில் நடிக்கும் சூர்யா ஒவ்வொரு  வேடத்திற்கும் ஏற்ப உடலமைப்பை மாற்றி நடித்து வருகிறார் என்பது செவி வழி செய்தி.

Also read: புயலால் தத்தளிக்கும் சென்னை, டாப் ஹீரோக்கள் சூர்யா, கார்த்திக்கை பார்த்து கத்துக்கோங்க!

ஆரம்ப காலங்களில் எதிர்மறையான விமர்சனத்தை எதிர் நோக்கிய சூர்யா, கடும் உழைப்புக்கு பின் வெற்றிக்கனியே ருசிக்க ஆரம்பித்தார். 47 வயதை தொட்டிருக்கும் அவர் இன்னும் இளமை மாறாமல் படத்திற்கு படம் தன் தோற்றத்தை வேறுபடுத்தி காட்டி ரசிகர்களை திருப்தி செய்து வருகிறார்.

இவரின் கட்டுக்கோப்பான உடல் அமைப்பின் ரகசியம் பற்றி கேட்டபோது  சிக்ஸ் பேக் வைத்துக்கொள்ள தனக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது வில்லன் நடிகர்களான ரியாஸ் கான் மற்றும் பப்லு என குறிப்பிட்டுள்ளார். வயதானாலும்  அவர்கள் மெயின்டைன் பண்ணும் சிக்ஸ் பேக்கை கண்டு ஆச்சரியப்பட்டதாக கூறினார்.

திரைத்துறையில் பல காலமாக சைன் பண்ணி வரும் ரியாஸ்கான் மற்றும் பப்லு அவர்கள் இளைஞர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உடல் அமைப்பை மெயின்டைன் பண்ணி வருகின்றனர்.  அதுமட்டுமில்லாமல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை பதிவிட்டு இளசுகளை உசுபேத்தி வருகிறார்கள்.

Also read:  பப்லுவை காதலி ஷீத்தல் கழட்டி விட இதான் காரணம்.. சீக்ரெட்டை லீக் செய்த பயில்வான்

Trending News