பாலாவிடம் சிக்காமல் ஆட்டம் காட்டிய அஜித்.. 2 முறை திட்டம் போட்டு பல்பு வாங்கிய சைக்கோ

Ajith-Bala: அஜித்துக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையே நடந்த பஞ்சாயத்து அனைவருக்கும் தெரியும். அந்த விவகாரத்தில் அஜித் தாக்கப்பட்டதாக கூட ஒரு செய்தி இருக்கிறது. ஆனால் இதெல்லாம் அரசல் புரசலாக வெளிவரும் தகவல்கள் தான்.

இது குறித்து பாலாவிடம் கேட்ட போது கூட அஜித்திடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று அசால்டாக கூறினார். இந்த சூழலில் அவர் இரண்டு முறை அஜித்துக்கு ஸ்கெட்ச் போட்ட விஷயம் கசிந்துள்ளது. அதாவது நான் கடவுள் படத்தில் தான் அஜித் நடிக்க இருந்து பின்னர் ஆர்யா வந்தார் என்பது நமக்கு தெரியும்.

ஆனால் அதற்கு முன்பே நந்தா படத்திலும் முதல் சாய்ஸ் அஜித் தான். அது சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நடக்காமல் போனது. அதை தொடர்ந்து தான் பாலா மீண்டும் நான் கடவுள் படத்தில் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். அதுவும் கைகூடாமல் போனது.

இதற்கு முக்கிய காரணம் என்று பார்க்கையில் பாலா ஒரு ஹீரோவுக்கான மரியாதையை கொடுக்க மாட்டார். நடிகர் என்ற முறையில் நடிப்பையும் கொஞ்சம் ஆக்ரோசத்தோடு தான் சொல்லிக் கொடுப்பார்.

அது மட்டுமல்லாமல் அவர் இருக்கும் இடத்தில் ஹீரோ என்ற கெத்தை கூட யாரும் காட்டக்கூடாது. காட்சிகள் ரியலாக வரவேண்டும் என்பதற்காக ஹீரோ, ஹீரோயின் என எதைப் பற்றியும் யோசிக்காமல் அடிக்க கூட செய்வார். அதனாலேயே அவரை சைக்கோ இயக்குனர் என்று கூறுவது உண்டு.

ஆனால் அஜித் அனைவருக்கும் மரியாதை கொடுப்பார். அதேபோன்று தன்னை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் நினைக்கக் கூடியவர். இது போன்ற சில உரசல்கள் காரணமாகவே அவர் பாலா உடன் இணைய விரும்பாமல் வெளியே வந்திருக்கிறார். ஆக மொத்தம் அஜித்துக்கு இரண்டு முறை ஸ்கெட்ச் போட்டும் பாலா பல்பு வாங்கியது தான் மிச்சம்.