பல லட்சம் செலவு செய்து நயன்தாரா மாதிரி மாறிய பிரதீப்.. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ!

Pradeep Ranganadhan: காசு பணம் வந்தா காக்கா குருவி கூட கலரா மாறிடும் என சும்மாவா சொன்னாங்க. ஆனாலும் அந்த காசு பணத்தை கூட திறமை இருந்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை. அதுபோல தான் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று வந்த பல பிரபலங்களும் அடுத்த கட்ட லெவலுக்கு போகும் போது தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

அப்படித்தான் சினிமாவில் நுழைந்த நயன்தாராவும் ஆரம்பத்தில் பார்க்க கலர் கம்மியாக தான் இருந்தார். ஆனால் போகப் போக மார்க்கெட் அதிகரிக்கும் பொழுது இவருடைய அழகையும் தோற்றத்தையும் மாற்றிக்கொண்டு தகதகவென்று ஜொலிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது இவரை போலவே லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரதீப்பும் முயற்சி எடுத்திருக்கிறார்.

பல லட்சக்கணக்கில் செலவு செய்து கலராக மாறி இருக்கிறார். அதாவது பிரதீப்புக்கு என்னதான் ரசிகர்கள் சப்போர்ட் கொடுத்து வந்தாலும் அவருக்குள் இருந்த ஒரு தாழ்வு மனப்பான்மை கருப்பு கலரில் இருக்கிறோம் என்பதுதான். அந்த வகையில் எவ்வளவு செலவு செய்தாலும் பரவாயில்லை என்று முடிவு பண்ணி அழகாய் மாற வேண்டும். நல்ல கலராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்.

Also read: பிரதீப் முதுகில் குத்திய துரோகிகள்.. 12-ல் 4 விக்கெட் காலி, அடுத்தது இவங்க தான்.?

அதற்காக பியூட்டி பார்லர் போயி பல லட்சங்களை வாரி கொடுத்து முகம் ஜொலிக்கும் அளவிற்கு மெருகேற்றி இருக்கிறார். தற்போது இவரை பார்ப்பதற்கு அமெரிக்க ரிட்டன் பாய் மாதிரி இருக்கிறார். ஆனால் இது நிஜமாகவே வாழ்நாள் முழுக்க இருப்பதற்காக இவர் இந்த மாதிரி மாறி இருக்கிறாரா அல்லது இவர் நடிக்கக்கூடிய படத்திற்காக இப்படி பண்ணி இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

எது எப்படியோ இந்த ஒரு எஃபோர்ட் அவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டால் சந்தோஷம்தான். ஏனென்றால் சில நடிகைகள் இப்படித்தான் அடுத்த படத்திற்காக தன்னை அழகாக மாற்றிக் கொள்வதும், சர்ஜரி செய்து முகத்தை பொலிவு பண்ணியும் வந்திருக்கிறார்கள். அப்படி பண்ணிய பிறகு அவர்களைப் பார்ப்பதற்கு ஒரு இயற்கை லுக் இல்லாமல் போயிருக்கிறது.

அதனாலேயே அவர்களுடைய சினிமா கேரியர் வெற்றியடையாமல் இருந்திருக்கிறது. இந்த லிஸ்டில் பிரதீப் சேராமல் படத்தின் மூலம் வெற்றி அடைந்தால் சரிதான். அத்துடன் இது செய்த பிறகு வேறு எந்த பிரச்சினையும் உடம்பில் வராமல் இருந்தாலும் ஓகே. ஆக மொத்தத்தில் இனி பிரதீப்பை பார்க்கும் பொழுது ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்.

Also read: ஹரிஷ் கல்யாணத்துக்கு கை கொடுத்த புது ராசி.. நயன்தாராவையே ஓரங்கட்டிய செகண்ட் இன்னிங்ஸ்