வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தனி ஒருவன் 2ல் சித்தார்த் கேரக்டரில் நடிக்க தேர்வான 5 ஹீரோக்கள்.. வாய்ப்பை தட்டி தூக்கிய வாரிசு நடிகர்

Thani Oruvan 2 Movie Update: கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் தனி ஒருவன். மோகன் ராஜா இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஏழு வருடங்களாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் முதல் பாகத்தை விட முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான களத்தில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

முதல் பாகத்தில் மித்ரன் ஐபிஎஸ் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவியை வில்லனாக நடித்த சித்தார்த் அபிமன்யு கேரக்டரில் நடித்த அரவிந்த் சாமியை தேடி சென்றார். ஆனால் இரண்டாம் பாகத்தில் வில்லன் தான் மித்ரனை தேடி வருவதாக கதையை உருவாக்கி இருக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

இதில் கதாநாயகனுக்கு நிகராக வில்லன் கேரக்டரும் வலுவாக பேசப்படுகிறது. முதல் பாகத்தில் சித்தார்த் அபிமன்யு போல் இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமி கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஐந்து ஹீரோக்களை மோகன் ராஜா தேர்வு செய்தார்.

Also Read: சைரன் படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம்.. தனி ஒருவன் போல் வெற்றிக்காக எடுத்த அதிரடி முடிவு

தனி ஒருவன் 2 படத்தின் வில்லன்

சியான் விக்ரம் தான் ஜெயம் ரவிக்கு வில்லனாக தனி ஒருவன் 2 படத்தில் நடிப்பார் என பெருவாரியாக பேசப்பட்டது. ஆனால் அது பேச்சளவில் மட்டுமே இருந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மாதவன், பகத் பாசில் போன்றவர்களையும் நடிக்க வைக்க யோசித்திருக்கின்றனர். அது மட்டுமல்ல பாலிவுட் நடிகர்களான அமீர்கான், அபிஷேக் பச்சன் போன்றோருக்கும் டெஸ்ட் சூட் நடத்தப்பட்டது.

கடைசியில் பாலிவுட் வாரிசு நடிகரான அபிஷேக் பச்சன் தான் தனி ஒருவன் இரண்டாவது சீசனில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்கப் போகிறார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது.

Also Read: நடிப்பெல்லாம் சும்மா ஹாபி தான்.. இவ்வளவு பெரிய நிறுவனத்தின் வாரிசா நம்ம அரவிந்த் சாமி?

Trending News