Vijay Movie Villain: ஒவ்வொருவரும் தன்னுடைய பிறந்த நாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் சினிமா பிரபலங்களை பற்றி சொல்லவே வேண்டாம் பப்பு பார்ட்டி இல்லாமல் எந்த ஒரு ஃபங்ஷனும் கிடையாது. இப்படி இருக்கும் பட்சத்தில் சூர்யாவின் நண்பர் அவருடைய 43 வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்.
அதுவும் ரஜினியை மிஞ்சும் அளவிற்கு செய்து இருக்கிறார். அதாவது இவருடைய பிறந்தநாளுக்கு இமயமலைக்கு சென்று இருக்கிறார். அங்கே ஆடை எதுவும் அணியாமல் பிறந்த மேனியாக நீரோடியில் நீராடி இருக்கிறார். இவர் இந்த முறை மட்டுமல்ல கிட்டதட்ட 14 வருஷமாக இதை தான் செய்து வந்திருக்கிறார்.
ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் தவறாமல் அங்கே போய் இமயமலைக்கு சென்று தரிசனம் செய்து முழு பக்தியுடன் வேண்டிட்டு வருவது தான் இவருக்கு ஆத்ம திருப்தியை அளித்திருக்கிறதாம். அதாவது அன்னைக்கு தன் கையாலேயே சமைத்து, இயற்கையோடு ஒன்றிணைந்து இறைவனை வழிபாடு செய்தால் மட்டுமே இவருடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதாக உணர்ந்து வருகிறார்.
அந்த வகையில் ஒரு சாமியாரைப் போல 10 நாட்களுக்கு முன்பாகவே தனிமையான வாழ்க்கையை மேற்கொண்டு அதற்கேற்ற தவங்களை செய்திருக்கிறார். எந்த ஒரு ஆடம்பரமான விஷயத்துக்கும் ஆசைப்படாமல், முற்றும் திறந்த முனிவராக மன நிம்மதிக்காக அந்த ஒரு நாளை செலவிடுவதுதான் ஆத்ம திருப்தி கிடைப்பதாக நினைக்கிறார்.
ரஜினி தான் இமயமலையை சொர்க்கம் என்று நினைக்கக் கூடியவர் என்று பார்த்தால் இவரையே மிஞ்சும் அளவிற்கு வித்யுத் ஜம்வால் இருக்கிறார். இவர் யார் என்றால் அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்த சந்துரு மற்றும் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர்.
தற்போது கிராக் மற்றும் ஷேர் சிங் ரானா போன்ற படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது. இப்படத்தை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கேரியரில் சாதிக்க வேண்டும் என்பதற்காக போராடி கொண்டிருக்கிறார்.
துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால்
