வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

நாட்டாமை தீர்ப்பு அவருக்கே ஆப்பு.. கமலை ஓரங்கட்டி பிக்பாஸை நடத்த 5 பிரபலங்களுக்கு வலை வீசும் விஜய் டிவி

Biggboss 7: இப்போது சோசியல் மீடியா பக்கம் போனாலே பிக்பாஸை தான் ரசிகர்கள் கிழி கிழி என்று கிழித்து வருகின்றனர். அதிலும் கமல் இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்ப்புகளை சம்பாதித்து வைத்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் நாட்டாமை கொடுத்த தீர்ப்பு தான்.

பிரதீப் விஷயத்தில் அவர் கொடுத்த தீர்ப்பு இப்போது அவருக்கே ஆப்பாக முடிந்திருக்கிறது. என்னதான் அந்த விவகாரத்தில் கமல் தன்னை நியாயப்படுத்திக் கொண்டாலும் அது ஓட்டை பானையில் தண்ணீர் ஊற்றிய கதையாக தான் இருக்கிறது. அந்த அளவுக்கு அவருடைய விளக்கத்தை யாரும் நம்பவில்லை.

இப்படி தொடர்ச்சியாக கிளம்பும் எதிர்ப்புகளை பார்த்த ஆண்டவர் இப்போது பிக்பாஸில் இருந்து ஜகா வாங்கும் முடிவில் இருக்கிறார். அதன்படி இன்னும் சில வாரங்களில் வேறு ஒரு ஹீரோ இந்த நிகழ்ச்சியை நடத்தவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அதற்கான தேடுதல் வேட்டையில் தான் இப்போது விஜய் டிவி இறங்கி உள்ளதாம்.

Also read: மனித கடிகாரமாக மாறிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.. ஃபினாலே டிக்கெட்டை வெல்லப்போவது யார்.?

அந்த வகையில் தற்போது மக்களின் கருத்துக்கள் படி பார்த்தால் சிம்பு இந்த நிகழ்ச்சியை வழங்க வேண்டும் என்ற கருத்து அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே இவர் ஹாட் ஸ்டாரில் வெளியான பிக் பாஸை நடத்தி இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக இன்னும் நான்கு நடிகர்கள் லிஸ்ட்டில் இருக்கின்றனர்.

அதன்படி சர்வைவர் நிகழ்ச்சியை வேற லெவலில் நடத்திய அர்ஜுன் அடுத்த சாய்ஸாக இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக விஜய் சேதுபதி, மாதவன், சரத்குமார் ஆகியோரும் பரிசீலனையில் இருக்கின்றனர். இவர்களில் ஒருவரை விஜய் டிவி தேர்வு செய்ய இருக்கிறது. அதில் சிம்புவுக்கு தான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஆனால் ஆண்டவரின் தயாரிப்பில் நடிக்க இருக்கும் சிம்பு இதற்கு ஒப்புக் கொள்வாரா என்பது கேள்விக்குறி தான். இருப்பினும் சிம்புவை வைத்து ஸ்க்ரிப்டை கமல் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதிர்பாராததை எதிர்பார்க்க வைப்பது தானே பிக்பாஸ்.

Also read: சேத்துலயும் அடி வாங்கியாச்சு சோத்துலயும் அடி வாங்கியாச்சு.. திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறும் ஆண்டவர்

Trending News