வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

வேட்டையன் ரஜினி தூக்கி போட்ட ஐ கிளாஸ் எவ்வளவு தெரியுமா.? கிராபிக்ஸ் இல்லாமல் நடந்திருக்கிற மேஜிக்

The details of Rajini’s eye glasses: ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினி அடுத்த சம்பவம் செய்ய போகும் படம் தான் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்குகிறார். சமீபத்தில் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு வேட்டையன் படத்தின் டீசர் ரிலீஸ் ஆகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது. இதில் ரஜினி கையில் லத்தியுடன் ‘குறி வெச்சா இர விழணும்’ என்ற பஞ்ச் டயலாக்கை பேசினார்.

இந்த டயலாக் பேசும் போது கையில் இருந்த ஐ கிளாசை வைத்திருக்கும் அவர், அதை தான் ஏற்கனவே அணிந்திருக்கும் சாதா கண்ணாடியில் தூக்கிப்போட்டு ஒட்ட வைக்கிறார். இது கிராபிக்ஸாக இருக்குமோ என இந்த டீசரை பார்த்த பலருக்கும் தோன்றியது.

ஆனால் உண்மையில் இது கிராபிக்ஸ் கிடையாது. இது ஒரு வகையான மேக்னடிக் கிளிப் ஆன் கிளாசஸ் வகையை சேர்ந்தது. இந்த கண்ணாடியின் பிரேம் மற்றும் கிளாஸ் இரண்டிலுமே மேக்னெட் இருக்குமாம். இதனால் பிரேம் மட்டும் போட்டுக்கொண்டு கிளாசை தூக்கி போட்டால் தானாக ஒட்டிக் கொள்ளுமாம்.

வேட்டையன் ரஜினி போட்டு இருந்த ஐ கிளாஸின் விவரம்

எப்படி ஜெயிலர் படத்தில் சிகாரை வாயில் தூக்கி போடுவது ஒரிஜினலாக இருந்ததோ அதே போல் தான் இதையும் தலைவர் செய்திருக்கிறார். இதனுடைய விலை ரூபாய் 3000. லென்ஸ்கார்ட்டில் இது படு ஜோராக விற்பனையாகிறது. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இப்போது இந்த கூலிங் கிளாஸ்சும் கையுமாய் தான் அலப்பறை செய்து வருகின்றனர்.

மேலும் வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட திரை பட்டாளமே இணைந்து நடிக்கின்றனர். அதுமட்டுமல்ல இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பகத் பாசில்தான் நடிக்கிறார். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் பூஜையுடன் துவங்கப்பட்டிருக்கிறது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி போலி என்கவுண்டர்காக போராடுபவராக நடிக்கிறார். மேலும் இதில் இவர் முஸ்லிமாக நடித்திருப்பதாகவும் ஜெய் பீம் படம் போலவே இந்த படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக உருவாக்கப்படுகிறது. இதனால் இந்தப் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

வேட்டையன் டீசரில் ரஜினி போட்டிருந்த ஐ கிளாஸ்

Vettaiyanirajini-eye-glass-cinemapettai
Vettaiyanirajini-eye-glass-cinemapettai

Trending News