சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

முத்து குடும்பத்தில் பூகம்பத்தை ஏற்படுத்த நினைக்கும் ஸ்ருதியின் அம்மா.. ஜால்ரா அடிக்கும் ரவி

Siragadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், சாதாரண நடுத்தர குடும்பத்தில் நடக்கும் பிரச்சினையும் அதனால் பிள்ளைகள் எவ்வளவு தூரத்துக்கு பாதிப்பு அடைகிறார்கள் என்பதையும் தெளிவாக காட்டப்பட்டு இருக்கும். மூன்று மகன்கள் இருந்தாலும் ஒரு மகனை மட்டும் ஓரவஞ்சனையாக பார்த்து வளர்ப்பது மிகவும் கொடுமையான விஷயம்.

அந்த வகையில் அவரை கட்டிட்டு வந்த மனைவியையும் ஏளனமாக நினைத்து வீட்டு வேலைக்காரியை விட மோசமாக நடத்துகிறார் முத்துவின் அம்மா விஜயா. மீதமுள்ள இரண்டு பணக்கார மருமகள்களை தலையில் தூக்கி வைத்து ஆடி அவர்களுக்கு சேவை செய்து வருகிறார் மாமியார். போதாக்குறைக்கு எந்த அளவுக்கு ஒரு மருமகளிடம் தகாத வார்த்தையை பேசக்கூடாதோ அதை பேசி மீனாவை கண்கலங்க வைத்து விட்டார்.

இதை கேள்விப்பட்டதும் முத்துவும் மனதார உடைந்து போய், என்னைய தான் இத்தனை நாளாக அவமானப்படுத்திட்டு வந்தீங்க. இப்பொழுது மீனாவையும் இந்த மாதிரி அசிங்கமாக பேசுகிறீர்களே உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா என்று கேட்கிறார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முத்துவின் அப்பா மனைவியை ரூம்குள் கூட்டிட்டு போயி லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்.

Also read: கை கால் உடைஞ்சும் திருந்தாமல் நந்தினியை உதாசீனப்படுத்தும் கதிர்.. அந்நியனாக மாறப்போகும் சக்தி

இதற்கு இடையில் ரவி ஆரம்பத்தில் முத்து மீனாவிற்கு ரொம்பவே சப்போர்ட்டாக நல்ல ஒரு கேரக்டராக இருந்தார். ஆனால் இந்த பிரச்சனையில் முத்து பக்கம் இல்லாமல் சுயநலமாக யோசிக்கிறார். அந்த வகையில் சுருதி இடம் வீட்டில் நடந்த பிரச்சனை எல்லாம் சொல்லிக்கொண்டு ரொம்பவே தயக்கத்துடன் பேசுகிறார். ஆனால் இதையெல்லாம் ஒரு விஷயம் இல்லை என்பதற்கு ஏற்ப ஸ்ருதி டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்கிறார்.

ஒரு வழியாக ரூம் பிரச்சனையை முடித்து வைக்க வேண்டும் என்பதற்காக முத்துவின் அப்பா எங்கள் அறையை ரவி எடுத்துக்கட்டும் என்று சொல்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மாமியார் வாய் அடைத்து போய் நிற்கிறார். அடுத்தபடியாக வீட்டிற்கு லேட்டாக வந்த ரவி சுருதி, நைட்டு தூங்குவதற்காக மொட்டை மாடியில் டெண்டு மாதிரி போட்டுக்கிட்டு அங்கேயே போய் விடுகிறார்கள்.

காலையில் எழுந்து பார்த்த முத்துவின் அப்பா இதெல்லாம் சரி வராது, நீங்கள் இனிமேல் எங்கள் ரூமிலியே தங்கிக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகிறார்கள். அதனால் அந்த டென்டை கழட்டும் பொழுது சுருதியின் அம்மா போன் பண்ணி நடந்த விஷயத்தை பற்றி கேட்கிறார். அப்பொழுது கூடிய விரைவில் இந்த குடும்பத்தை பிரித்து விட வேண்டும் என்று சுருதி அம்மா நினைக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்து என்னென்ன விஷயங்கள் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: பாக்யாவின் கேன்டியனுக்கு புதிதாக வந்த பிரச்சனை.. ரணகளத்திலும் குதூகலமாக ஆட்டம் போடும் கோபி அங்கிள்

Trending News