Ajith-Vijay: காலாகாலமாக சினிமாவில் இரு துருவங்கள் என்ற போட்டி இருந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படித்தான் விஜய், அஜித் இருவருக்கும் தொழில் ரீதியாக ஒரு போட்டி நிலவி வருகிறது. அதனாலேயே இவர்களின் நடவடிக்கைகள் நிஜ வாழ்க்கையிலும் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் அஜித் தற்போது செய்திருக்கும் ஒரு உதவியால் விஜய்யின் பெயர் டேமேஜ் ஆகி இருக்கிறது. அதாவது சமீபத்தில் சென்னையை மிக்ஜாம் புயல் வந்து சூறையாடியது. அதில் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து கடும் சேதத்தையும் சந்தித்தது.
அப்போது கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் பல உதவிகள் செய்யப்பட்டது. ஆனால் அவை அனைத்துமே பயங்கரமாக விளம்பரப்படுத்தப்பட்டது.
Also read: சூப்பர் ஸ்டார் ரூட்டுக்கு மாறிய அஜித்.. 16 கிலோ எடை குறைத்ததன் ரகசியம் இதுதான்
மக்களின் கஷ்டத்தை வைத்து விளம்பரம் தேடிய இவர்கள் சோசியல் மீடியாவிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். உண்மையில் இந்த விஷயத்தில் அஜித்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று சொல்வார்கள்.
அப்படித்தான் அஜித்தும் எந்த கொடியும் இல்லாமல் ஸ்டிக்கரும் இல்லாமல் கோடிக்கணக்கில் உதவிகளை வாரி வழங்கியிருக்கிறார். அதாவது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 மக்களை தன் வீட்டிற்குள் தங்க வைத்து அவர் மூன்று நாட்கள் பார்த்துக் கொண்டாராம்.
அந்த மூன்று வேளையும் அவர்களுக்கு விதவிதமான உணவுகளை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் கிளம்பும் போது ஆளுக்கு 10 ஆயிரம் ரூபாய் என கொடுத்து அசத்தியிருக்கிறார். இந்த விஷயத்தை பயில்வான் தற்போது ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
சின்னதாக ஒரு உதவி செய்தாலே விளம்பரப்படுத்திக் கொள்ளும் பிரபலங்களுக்கிடையே அஜித் செய்தது மிகப்பெரிய விஷயம் தான். ஆக மொத்தம் அரசியல் ஆசையில் இருக்கும் விஜய் உதவி செய்வது எப்படி என்று அஜித்தை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.