Serial Actors maintain six pack for their profession: உடற்பயிற்சி செஞ்சா உடம்பு வலிக்கும் என புலம்பும் ஆசாமிகளை வயிறு எரிய வைப்பது இந்த சிக்ஸ் பேக். சிக்ஸ் பேக் வைத்திருப்பது மற்றும் அதை மெயின்டைன் பண்ணுவது என்பது சாதாரண விஷயம் அல்ல கடினமான போராட்டம். தினமும் பல மணி நேர உடற்பயிற்சியும் கடுமையான உணவு பழக்க வழக்கமும் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவோ ஸ்டைலாக தெரிய வேண்டும் என்பதற்காகவோ நடிகர்கள் சிலர் சிக்ஸ் பேக்கை மெயின்டைன் பண்ணி வருகிறார்கள். அதற்காக பல கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் உணவு கட்டுப்பாட்டை சீராக பராமரிக்கவும் செய்கிறார்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் சிலரோ இப்படியாவது நமக்கு வாய்ப்புகள் கிடைக்காதா என்னும் நோக்கோடு சிக்ஸ்பேக் வைத்துள்ளனர்.
ரியாஸ் கான்: இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்து உள்ளார். சன் டிவி சீரியல்களில் அதிகமாக தலை காட்டும் ரியாஸ்கான், நாகினி சீரியலில் திருநங்கை வேடத்திலும் தோன்றி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். நடிகர்கள் சிலருக்கும் உடற்பயிற்சி டிப்ஸ் கொடுக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
Also read: 2023ல் அதிரடியாக நிறுத்தப்பட்ட சீரியல்களின் லிஸ்ட்.. சமையலம்மாவிற்கு எண்டு கார்டு போட்ட விஜய் டிவி
பப்லு: “கண்ணான கண்ணே” சன் டிவி சீரியலில் பாசமான தந்தையாக நடித்திருந்தார் பப்லு என்கிற பிருத்விராஜ். தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜியின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர், குணச்சித்திர நடிகர், வில்லன் என பன்முக அவதாரங்களை எடுத்த பப்லு தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கு மேலாக சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
கணேஷ் வெங்கட்ராமன்: “மிஸ்டர் இந்தியா 2003” யின் வெற்றியாளரான கணேஷ் வசீகரமான தோற்றத்துடன் சிக்ஸ் பேக்கில் 200க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். தன் உடல் கட்டுக்கு ஏற்ப காவல்துறை வேடங்களை அதிகமாக ஏற்று நடித்து வருகிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்ப இருக்கும் நினைத்தேன் வந்தாய் சீரியலில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம்.
அரவிந்த் சேகர்: 2022 இல் “மிஸ்டர் தமிழ்நாடு” பட்டத்தின் இரண்டாவது பரிசை வென்ற அரவிந்த் சேகர் பிரபல சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவராவார். நாதஸ்வரம், கல்யாணப்பரிசு, பாரதிகண்ணம்மா சீரியல்களின் மூலம் பிரபலமான இவர் அரவிந்த் சேகரை காதலித்து திருமணம் முடித்தார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மெனக்கெட்ட அரவிந்த் சேகர் இளம் வயதிலேயே மாரடைப்பு வந்து இறந்த செய்தி சின்னத்திரையில் அதிர்ச்சியை கிளப்பியது.
சந்தோஷ் பிரதாப்: குக் வித் கோமாளியில் சில எபிசோடுகளே வந்திருந்தாலும் பலரது கவனத்தையும் ஈர்த்த சந்தோஷ் பிரதாப் அடிக்கடி சிக்ஸ் பேக் உடன் புகைப்படங்கள் எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
Also read: டிஆர்பி-யில் கலக்கும் டாப் 6 சீரியல்கள்.. சிங்கப் பெண்ணால் ஆட்டம் கண்ட பிரபல சேனல்