எது செஞ்சாலும் வித்தியாசம் தான்.. அஜித் கொடுத்த சர்ப்ரைஸால் திக்கு முக்காடிய விடாமுயற்சி டீம்

Actor Ajith: அஜித் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஆனாலும் அவர் சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் வருகிறார். அப்படி அவர் செய்த ஒரு விஷயம் இப்போது பயங்கர ட்ரண்ட் ஆகி வருகிறது. இதனால் படகுழுவும் இப்போது சந்தோஷத்தில் திக்கு முக்காடி இருக்கிறது.

அதாவது அஜித் நடிப்பை தாண்டி பல விஷயங்களில் திறமையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதன்படி போட்டோகிராஃபியில் ஆர்வத்துடன் இருக்கும் அவர் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்களை புகைப்படம் எடுப்பது வழக்கம்.

அப்படித்தான் விடாமுயற்சி படப்பிடிப்பின் போதும் அவர் வளைத்து வளைத்து போட்டோ எடுத்திருக்கிறார். எதை செய்தாலும் வித்தியாசமாக செய்யும் அஜித் இந்த போட்டோக்களை பிரேம் போட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

அந்த போட்டோக்கள் தான் இப்போது மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் மகிழ்திருமேனி, அர்ஜுன், ரெஜினா, ஓம் பிரகாஷ் ஆகியோரின் போட்டோக்கள் இப்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்பும் கூட அஜித் சக கலைஞர்களை போட்டோ எடுத்திருக்கிறார்.

அஜித் எடுத்த புகைப்படங்கள்

ajith-photography
ajith-photography

அதில் வீரம் படப்பிடிப்பின் போது நடிகர் அப்புகுட்டியை அஜித் போட்டோ ஷூட் செய்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது. அதில் அப்புகுட்டியின் தோற்றமும் பயங்கர ஸ்டைலிஷாக இருந்தது. அதையடுத்து இப்போது விடா முயற்சி டீமுக்கும் அஜித் பெரும் சர்ப்ரைஸை கொடுத்திருக்கிறார்.