வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

‘A’ சர்டிபிகேட்டை கொடுத்து இடியை இறக்கிய சென்சார் போர்டு.. மண்டை காஞ்சி போய் பிரபாஸ் சொன்ன வார்த்தை

Salaar-Prabhas: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பாகுபலி நாயகன் நடித்துள்ள சலார் வரும் 22 ஆம் தேதி வெளியாகிறது. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் இணைந்திருக்கும் இப்படம் கிட்டதட்ட 270 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

அதனாலேயே இப்படம் இப்போது பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் வெளியான டிரைலரும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைத்திருப்பது சிறு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அது குறித்து தற்போது சலார் பட இயக்குனர் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் பல இடங்களில் காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதையெல்லாம் செய்வதற்கு எனக்கு சம்மதம் தான்.

Also read: ரிலீஸ் தேதியுடன் வெளியான சலார் பட புது ட்ரெய்லர்.. வரலாற்றை திருப்பி போடும் ரெண்டு நண்பர்கள்

ஆனால் ஒரு சில காட்சிகளை என்னால் நீக்க முடியாது. ஏனென்றால் அந்த காட்சிகள் அனைத்தும் கதைக்கு தேவை. அப்படி அதை நீக்கினால் அது மொத்த படத்தையும் பாதிக்கும். அதேபோன்று படத்தில் முகம் சுளிக்கும் படியான எந்த காட்சிகளும் இல்லை. வன்முறைகள் எல்லாமே தேவையான அளவுக்கு தான் இருக்கிறது.

அதனால் சென்சார் அதிகாரிகள் கூறிய விஷயத்தை நான் பிரபாஸிடம் தெரிவித்தேன். உடனே அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஏ சர்டிபிகேட் எடுங்கள் என்று கூறினார். அதன் பிறகு தான் இந்த சர்டிபிகேட்டை பெற்றோம் என விளக்கம் அளித்துள்ளார்.

இதிலிருந்து அவர்களுக்கு படத்தின் கதை மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பது தெரிகிறது. கடந்த சில தோல்விகளை பார்த்த பிரபாஸ் சலாரை தான் முழுமையாக நம்பி இருக்கிறார். அவருடைய நம்பிக்கையை இப்படம் காப்பாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: கேஜிஎஃப் காந்தாரா படத்தை தோற்கடிக்க போகும் சலார்.. முழிப்பிதுங்கி பேய் நிற்கும் பிரபாஸ்

Trending News