விஜய் தம்பி வளர கூடாது என திட்டம் தீட்டும் விஷ்ணு விஷால்.. வாரிசு நடிகருக்கே இந்த நிலைமையா!

Lal Salam: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். பல வருட இடைவெளிக்குப் பிறகு லால் சலாம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார். இந்த படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.

விக்ராந்த் தளபதி விஜய் அவர்களின் சொந்த சித்தி பையன். இவர் கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். கற்க கசடற மற்றும் பாண்டியநாடு படங்கள் இவருடைய சிறந்த நடிப்பிற்கு முன்னுதாரணம். சித்தி பையனாக இருந்தும், இவருக்கு நடிகர் விஜய் உடைய சாயல் அப்படியே இருக்கும். நடிப்பு திறமையோடு சேர்த்து நன்றாக நடனமும் ஆடுவார்.

ரஜினியின் மகனாக விக்ராந்த்

ஆனால் விக்ராந்துக்கு இதுவரையிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவுமே அமையவில்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு தான் இந்த லால் சலாம் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் அவருக்கு ரஜினியின் மகன் கேரக்டர் என சொல்லப்படுகிறது. இதனால் இவருக்கு படத்தில் நிறைய சீன்கள் இருக்கிறதாம்.

இது படத்தின் மற்றொரு கதாநாயகன் விஷ்ணு விஷாலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். படத்தில் எனக்கும் அதே அளவுக்கு சீன் வையுங்கள், இல்லை என்றால் விக்ராந்தின் காட்சிகளை தூக்கங்கள் என விதண்டாவாதம் செய்து வருகிறாராம். விஷ்ணு விஷால் பொருத்த வரைக்கும் விவாகரத்து, குடிப்பழக்கம் என சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்து விட்டார்.

நடிகர் விஷால் மற்றும் உதயநிதியின் சப்போர்ட்டில் தான் இதுவரை அவருக்கு வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இவரே இந்த நிலைமையில் இருக்கும் பொழுது, வளர்ந்து வர ஆசைப்படும் நடிகர் விக்ராந்தை இப்படி ஒடுக்க நினைப்பது நியாயமே இல்லாத செயல். இத்தனைக்கும் அவர் நன்றாக நடிக்கக்கூடிய சிறந்த நடிகர்.

சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகனாக இருக்கும் விஜய்யின் தம்பிக்கு இந்த நிலைமையா என ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. உண்மையை சொல்ல போனால் விஜய் தன்னுடைய சொந்த மகனின் வளர்ச்சியிலேயே தன்னுடைய தலையீடு இருக்கக் கூடாது என நினைக்கிறார். அப்படி இருக்கும் பொழுது கண்டிப்பாக தன்னுடைய சித்தி மகனுக்கு எல்லாம் வரிஞ்சு கட்டிக் கொண்டு வர வாய்ப்பே இல்லை.