ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

6 முத்தின முருங்கைக்காய் கல்யாணத்தை வெறுத்த காரணம்.. நினைத்தாலும் வாய்ப்பில்லாத பப்பாளி நடிகை

6 Actresses are not interested in marriage life: திரையில் நடிகர்களை கொண்டாடும் அளவிற்கு நடிகைகளை கொண்டாட தவறி விடுகின்றனர் ரசிகர்கள். முன்னணி நடிகர்கள் அரை நூற்றாண்டிற்கும் மேலாக சினிமாவை ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அந்த மாதிரியான வாய்ப்புகள் நடிகைகளுக்கு வாய்ப்பதில்லை. பத்து வருடங்களுக்கு மேலாக இருந்தாலே அது அந்த நடிகையின் சாதனையாக கருதப்படுகிறது.

நடிகைகள் பலர் வாய்ப்புகள் உள்ளவரையில் சினிமாவில் ஒரு ரவுண்டு கலக்கி விட்டு திருமணம், குழந்தை என செட்டி ஆகி விடுகின்றனர் ஆனால் நடிகைகள் சிலரோ திருமணமாகாமல் சிங்கிளாகவே தனது வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர் அப்படியான நடிகைகளில் சிலர்.

நக்மா: ஒரு காலத்தில் காதலன், பாட்ஷா, மேட்டுக்குடி என முன்னணி நடிகர்களுடன் வலம் வந்தவர். ஜானகிராமன் படத்தில் நடித்ததன் மூலம் சரத்குமார் உடன் கிசுகிசுக்கப்பட்டார். மேலும் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியுடன் பேசப்பட்ட நக்மா, தீனா படத்தின் ஒரு பாடலுக்கு கூட நடனம் ஆட முடியாமல் டேட்டிங் பிராபளத்தில் சங்கடப்பட்டு போனாராம்.

அனுஷ்கா: ஹீரோவுக்கு நிகராக அருந்ததியில் மாஸ் காட்டிய அனுஷ்கா 42 வயதை கடந்த போதும் இன்னும் திருமணம் ஆகாமல் உள்ளார். அனுஷ்காவிற்கு தொழிலதிபர், இயக்குனர் என மாறி மாறி கோத்துவிட்டு பின் பிரபல நடிகர் ஒருவரை தீவிரமாக காதலிப்பதாகவும் அடுத்த ஆண்டு இருவருக்கும் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Also read: முத்தின கத்திரிக்காயை காதலித்து திருமணம் செய்த 5 நடிகைகள்.. தோழிக்கு வேட்டு வைத்த காவ்யா மாதவன்

கிரண்: இவர் அறிமுக படமான ஜெமினியில்  நடிகருக்கு இணையாக இவருக்கும்  மாஸ்காட்டி இருந்தனர். பட வாய்ப்புகள் குறைந்ததனால் ஓவர் கிளாமர் காட்டினாரா அல்லது இவருடைய ஓவர் கிளாமர், பட வாய்ப்புகளை குறைத்ததா என்று தெரியவில்லை. அதிகமான உடல் எடை, தவறான புகைப்படங்களை பதிவிடுதல் என்று பெயரை கெடுத்துக் கொண்டார் கிரண். பப்பாளி போல் பெருத்து உள்ள இந்த கன்னிகை மாப்பிள்ளை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

தபு: 90’s கிட்ஸ்களின் கனவுக்கன்னி ஆன தபு வைகுண்டபுரத்தில் அல்லு அர்ஜுனனின்  அழகான அம்மாவாக  ஜெயராமுடன் நடித்து  ஸ்கோர் செய்திருந்தார். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனனின் மீது உள்ள ஒரு தலை காதலால் “நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை” என்று சோக கீதம் பாடி இன்றும் பூவே உனக்காக விஜய் ஸ்டைலில் சிங்கிளாக சிறகடித்து வருகிறார்.

ஸ்ருதி ராஜ்: தென்றல், ஆபீஸ்  சீரியல்கள் மூலம் மக்களுக்கு நன்கு பரிச்சியபட்டவர் இந்த ஸ்ருதி ராஜ். கலைக்காக தனது திருமண வாழ்க்கையை தியாகம் செய்தவர் என இவரைக் கூறலாம். 43 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இன்றும் தனது கேரியர் போய்விடக் கூடாது என்று இளமையை பாதுகாத்து சீரியல்களில் பிஸியாகி உள்ளார் ஸ்ருதி ராஜ்.

சித்தாரா: இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் புது புது அர்த்தங்களில் அறிமுகமானார் சித்தாரா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருபவர். தந்தைக்காக திருமணம் செய்யாமல் இருந்து, தந்தை இறந்த பின்னும் திருமணம் பற்றி சிந்திக்கவில்லை இந்த சித்தாரா.

Also read: 2023-இல் கல்யாணம் பண்ணிக் கொண்ட 5 பிரபலங்கள்.. பெரிய இடத்து பெண்ணை வளைத்து போட்ட மாப்பிள்ளைகள்

Trending News