மீண்டும் வேலையை தொடங்கிய காஜி நிக்சன்.. மாயா, பூர்ணிமா ஆசைப்பட்ட உமன் சேஃப்டி இதுதானா?

BB7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை பங்கேற்ற போட்டியாளர்கள் யாருமே செய்யாத மட்டமான வேலையை சீசன் 7 போட்டியாளர் நிக்சன் செய்து கொண்டிருக்கிறார். பெண்களை உடல் அமைப்பை வைத்து கமெண்ட் செய்வது, ஐஷுவிடம் நெருங்கி பழகியது என இவர் செய்த வேலைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படி ஒருத்தரிடம் எப்படி மாயா மற்றும் பூர்ணிமா பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.

நிக்சன் ஏற்கனவே வினுஷா விஷயத்தில் ரொம்பவும் தவறாக சில விஷயங்களை பேசி இருந்தார். அப்போது பெண்களின் உடல் அமைப்பு பூர்ணிமா போன்று இருக்க வேண்டும், அவர் கரெக்டாக இருக்கிறார் என்று கேவலமான ஒரு கமெண்டை சொல்லி இருப்பார். அவர் சொன்ன அந்த வார்த்தையை பிக் பாஸ் ஒரு சமயம் திரையில் போட்டு காட்டிய போது, பூரணிமா அது பெருமையாக எடுத்துக் கொண்டார்.

ஒரு பெண்ணை அக்கா என்று கூப்பிட்டு விட்டு அவருடைய உடல் அமைப்பை கமெண்ட் செய்ய எப்படி முடியும் என பூரணிமா யோசிக்கவே இல்லை. பிரதீப் ஆண்டனி இடம் பாதுகாப்பான உணர்வு வரவில்லை, அவர் இருக்கும் இடத்தில் இரவு நேரத்தில் தூங்கக்கூடா பயமாக இருக்கிறது என்று கதறியவர், இந்த விஷயத்தில் தன்னைத்தானே பெருமையாக நினைத்துக் கொண்டார்.

இது போதாது என்று கடந்த வாரம் நிக்சன் மற்றும் பூர்ணிமா இருவரும் இணைந்து வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்கள். பிரபுதேவா மற்றும் கஜோல் ஆடுவதைப் போலவே ரொம்பவும் நெருக்கமாக அந்த நடன அசைவுகள் இருந்தது. ஒரு பக்கம் இதை பார்ப்பதற்கு அமுல் பேபி விஷ்ணுவுக்கு ரொம்பவும் வயிற்று எரிச்சலாக இருந்தது நன்றாகவே தெரிந்தது.

உமன் சேஃப்டி இதுதானா?

இந்த டான்ஸ் அலம்பல் முடிந்த பிறகு நிக்சன், பூர்ணிமாவிடம் இதுவரை யாரும் உங்களை காதலிப்பதாக சொல்லவில்லையா, உங்களுடன் அப்படி நடனம் ஆடும் போது எனக்கு என்னவோ மாதிரி இருந்தது என பச்சையாக வழிந்தார். பூர்ணிமா இதற்கு கோபப்படவே இல்லை. மாயாவிடம் இந்த விஷயத்தை பற்றி சொல்லிவிட்டு இதை எல்லாம் காம்ப்ளிமென்ட் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

ஒரு ஆண் தன்னிடம் வந்து இப்படி பேசுவது பூர்ணிமாவுக்கு தவறாகவே தெரியவில்லை என்பது ரொம்பவே ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு வேளை இவர் எதிர்பார்க்கும் பெண்களின் பாதுகாப்பு என்பது இதுதான் போல. பெண்கள் உரிமை, பெண்கள் பாதுகாப்பு என்று அலட்டிக் கொள்ளும் இவர்கள், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்லும் ஒரு வார்த்தைக்கு அடிமையாகி விடுவது ரொம்பவே தவறான விஷயம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →