1. Home
  2. சினிமா Buzz

அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு மறுத்ததால் ஓங்கி அறைந்த இயக்குனர்.. நடிப்புக்கு குட்பை சொன்ன நடிகை

அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு மறுத்ததால் ஓங்கி அறைந்த இயக்குனர்.. நடிப்புக்கு குட்பை சொன்ன நடிகை

இப்போதெல்லாம் புதுமுக நடிகைகள் முன்னணி இடத்திற்கு வரவேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் ஆக வேண்டும். அதிலும் ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குனர் என்பதை தாண்டி இன்னும் சில பேருக்கும் அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டியது கட்டாயமாகி வருகிறது. அப்படித்தான் அக்கட தேசத்திலிருந்து நடிக்க வந்த நடிகைக்கும் ஒரு அனுபவம் நடந்திருக்கிறது. முகம் சுளிக்க வைக்கும் கதைகளை எடுப்பதில் கில்லாடியான இயக்குனரின் படத்தில் இவர் நடிக்க கமிட்டானார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் இவருக்கு பலான தொந்தரவை கொடுத்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இயக்குனரின் ஆசைக்கு இணங்க முடியாது என்று நடிகை வெளிப்படையாக மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் கடுப்பான இயக்குனர் ஒரு முக்கிய காட்சியை சூட் செய்யும்போது நடிகையை ஓங்கி அறைந்திருக்கிறார் உண்மையில் நடிப்பு சொல்லிக் கொடுக்கத்தான் இயக்குனர் இப்படி செய்தார் என்று படகுழுவினர் நம்பி இருக்கிறார்கள். ஆனால் நடிகைக்கு மட்டுமே இதற்கான காரணம் தெரிந்திருக்கிறது. ஆனாலும் அவர் இயக்குனரின் ஆசைக்கு சம்மதிக்காமல் படத்தை எப்படியோ முடித்துக் கொடுத்திருக்கிறார். அதை அடுத்து சினிமாவே வேண்டாம் என்ற அளவுக்கு அவர் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறார். நல்ல திறமையான நடிகையாக இருந்தும் கூட இந்த சேச்சி தற்போது நடிப்பை விட்டு ஒதுங்கி இருப்பதற்கு அந்த இயக்குனர் தான் முக்கிய காரணம்.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.