Rajini in Vettaiyan Movie: கமலுக்கு எப்படி ஒரு விக்ரம் படமோ, அதே மாதிரி ரஜினிக்கு கடந்தாண்டு ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவிற்கு வசூல் சாதனையை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதற்கு முன்னதாக ரஜினி நடித்த படங்களில் அதிக அளவில் வசூலை பெற்றிருந்தாலும் ஜெயிலர் படம் எப்போதுமே ஒரு ஸ்பெஷல் தான். அதற்கு காரணம் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் ஜெயிலரின் வசூலை தோற்கடித்து விடும் என்று நினைத்திருந்த சிலருக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து அடுத்த படங்களிலும் வசூலில் முந்த வேண்டும் என்பது ரஜினிக்கு தோன்றி விட்டது. அதனாலயே வெற்றி இயக்குனரான ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் தற்போது வேட்டையன் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதில் அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா, மஞ்சு வாரியார், ரித்திகா சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வருகிறது.
அப்படிப்பட்ட இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மிக மும்மரமாக சூட்டிங் போய்க் கொண்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் விஜயகாந்த் காலமானதை ஒட்டி அவரை பார்ப்பதற்காக சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பி வந்தார்.
Also read: தாய் முதல் தாரம் வரை.. ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் வாழ்வில் நிகழ்ந்த கோஇன்சிடன்ஸ்
அதன் பின் விஜயகாந்த்-க்கு செலுத்த வேண்டிய இறுதி அஞ்சலியை செலுத்தி விட்டு மறுபடியும் தூத்துக்குடிக்கு படப்பிடிப்புக்காக கிளம்பி விட்டார். இதற்கு இடையில் கொஞ்சம் நேரம் கூட ஓய்வு எடுக்காமல் போனதற்கான முக்கிய காரணம் படப்பிடிப்பை சீக்கிரத்தில் முடித்துவிட்டு கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் பண்ணி விட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ரஜினி இருந்தார்.
ஆனால் தற்போதைய நிலைமைப்படி படத்தில் விஎப்எக்ஸ் டெக்னாலஜி வேலை அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் பண்ண முடியாத சூழ்நிலை இருக்கிறது. அதனால் குறைந்தபட்சம் எப்படியும் இன்னும் ஏழு எட்டு மாதங்கள் வரை படப்பிடிப்பு இழுத்தடிக்கும். அதனால் வேட்டையன் படம் ஒருவேளை தீபாவளிக்கு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ரஜினி அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் முகைதீன் பாய் கேரக்டரில் நடித்த லால் சலாம் படம் வெளிவரும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இதில் சில பல வேலைகள் இருப்பதால் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்விட்டது. எப்படி இருந்தாலும் இந்த ஆண்டு ரஜினி நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீசாக போவது உறுதியாகிவிட்டது.