வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

வடிவேலு அவமானப்படுத்தியும் கூப்பிட்டு பேசிய கேப்டன்.. கூலிங் கிளாஸ் போட்டு அசிங்கப்பட்ட சம்பவம்

Vijayakanth and Vadivelu: தான் சும்மா இருந்தாலும் வாய் சும்மா இருக்காது என்று சொல்வார்கள் அது போல தான் வடிவேலும். இவருடைய அசாத்தியமான நகைச்சுவைக்கு ஈடாக யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் ஒரு நகைச்சுவை மன்னராகவே வாழ்ந்து வருகிறார். அப்படிப்பட்டவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு ஆரம்பத்தில் முக்கிய புள்ளியாக இருந்து கை கொடுத்து தூக்கி விட்டவர் கேப்டன் விஜயகாந்த்.

அதன்பின் வடிவேலு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது ஒய்யாரத்தில் வந்திருந்தாலும், செய்நன்றி மறந்து வாய்க்கு வந்தபடி விஜயகாந்தை அவதூறாக பல மேடைகளில் பேசி அவமானப்படுத்தி இருக்கிறார். அதாவது விஜயகாந்த் வடிவேலும் ஒரே ஊர்காரங்க தான் மதுரை. அப்பொழுது இவர்கள் இருவரும் எதர்ச்சியாக ஊருக்கு போகும் நேரத்தில் ஒரே ஏர்போர்ட்டில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதனால் வடிவேலு முக்கால்வாசி போகும்பொழுது கூலிங் கிளாஸ் போட்டுக் கொள்வாராம். எதற்கென்றால் நம் யாரை பார்க்கிறோம் என்ன செய்கிறோம் என்று கண் மூலமாக தெரிந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக மறைத்துக் கொள்ள இந்த மாதிரி ஒரு ஐடியாவை ஃபாலோ பண்ணுவாராம். அதேபோல ஒரு முறை இருவரும் ஒரே ஏர்போர்ட்டில் சந்தித்து இருக்கிறார்கள்.

Also read: விஜயகாந்த் இறப்புக்கு வருத்தம் தெரிவிக்க முடியல.. ஆனா நல்லா குத்தாட்டம் போட்ட அஜித்

ஆனால் வடிவேலு, விஜயகாந்த் பார்த்தும் பார்க்காதபடி இருந்திருக்கிறார். பிறகு வடிவேலுவை கிராஸ் பண்ணிய விஜயகாந்த்,  வடிவேலுவை பார்த்து பேசிட்டு தான் போயிருக்கிறார். எப்படி இருக்கிறாய், என்ன படங்களை எல்லாம் பண்ணி இருக்கிறாய் என்று ஒரு அக்கறையில் 5 நிமிடம் வரை பேசிய பிறகுதான் விஜயகாந்த் போயிருக்கிறார்.

இதனால்தான் விஜயகாந்தை அனைவரும் கேப்டன் என்று கொண்டாடுகிறார்கள். தனக்கு ஒருவர் தீங்கே செய்தாலும் அவருக்கு நல்லது நினைக்கக்கூடிய உத்தமமான மனசு. ஆனால் வடிவேலு, கிடைக்கிற இடத்தில் எல்லாம் விஜயகாந்த் பற்றி எந்த அளவுக்கு அவதூறாக பேசி அவர் மனதையும் அவரையும் அசிங்கப்படுத்த முடியுமோ அதை மிக மட்டமாக செய்திருக்கிறார்.

அதனாலேயே வடிவேலு அவருடைய பத்து வருட சினிமா வாழ்க்கையை இழந்து யாரும் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு கஷ்டப்பட்டு இருந்திருக்கிறார். அப்படி வந்தும் கூட தற்போது விஜயகாந்தின் மறைவிற்கு நேரடியாகவும் இரங்கலை தெரிவிக்கவில்லை. அட்லீஸ்ட் ஒரு மனிதாபிமானத்துடன் ஆழ்ந்த இரங்கலுக்கான ஒரு பதிவுயாவது போட்டிருக்கலாம்.

Also read: விஜயகாந்த் மரணத்தில் விஜய் சேதுபதி வைத்த கோரிக்கை.. கண்டுக்காத நன்றி கெட்ட நடிகர் சங்கம்

Trending News