செல்வ சீமாட்டியாய் வாழும் 5 ஹீரோயின்களின் சொத்து மதிப்பு.. நம்பர் ஒன் இடத்தை விட்டுக் கொடுக்காத நயன்

 5 Heroines Net Worth : சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக இப்போது ஹீரோயின்களின் சம்பளமும் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் உள்ள கதாநாயகிகளில் முதல் ஐந்து இடத்தில் அதிக சொத்து மதிப்புடன், செல்வ சீமாட்டியாய் வலம் வரும் நடிகைகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பூஜா ஹெக்டே : முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே அதன் பிறகு டாப் நடிகர்களுடன் பல படங்களில் நடித்து இருந்தார். அதுவும் தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். தற்போது பூஜா ஹெக்டேக்கு 50 கோடி சொத்து மதிப்பு இருக்கிறது.

சமந்தா : சமந்தா ஒரு காலகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்தார். ஆனால் அவருக்கு அரிய வகை நோய் பாதித்த நிலையில் பழையபடி சமந்தாவால் படங்களில் வேலை செய்ய முடியவில்லை. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே கமிட்டாகி வருகிறார். அவருடைய சொத்து மதிப்பு தற்போது 89 கோடியாக இருக்கிறது.

அனுஷ்கா ஷெட்டி : அனுஷ்கா தனக்கு எந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருக்குமோ அது போன்ற படங்களை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பாகுபலி படத்தில் அனுஷ்காவின் தேவசேனா கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. வருடைய சொத்து மதிப்பு தற்போது 100 கோடியாக இருக்கிறது.

தமன்னா : எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னிப் படலெடுக்கக்கூடியவர் தான் தமன்னா. சமீபகாலமாக அவருக்கு மார்க்கெட் இல்லாத நிலையில் ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடித்து இருக்கிறார். இவருக்கு பட வாய்ப்புகள் தற்போது குவிந்து வருகிறது. இந்நிலையில் தமன்னாவின் சொத்து மதிப்பு இப்போது 110 கோடியாக இருக்கிறது.

நயன்தாரா : நம்பர் ஒன் இடத்தை விட்டுக் கொடுக்காத நயன்தாரா சொத்து மதிப்பிலும் முதலிடத்தில் தான் வகித்து வருகிறார். இப்போது அவரது படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில் நயன்தாராவின் தற்போதைய சொத்து மதிப்பு 165 கோடியாக இருக்கிறது.