Bollywood Actor sharukhan likes tamil comedy actor and fix him for their next film: தமிழில் 2013 இல் வெளிவந்த ராஜா ராணியின் மூலம் வசூலில் வாரி குவித்து தமிழ் சினிமாவை உற்று நோக்க வைத்த அட்லீ அவர்கள் பாலிவுட்டிலும் சென்று சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜோடிசேர்ந்து உலக அளவில் வசூலை வாரி குவித்து பலரது பார்வையையும் தன் மீது விழ வைத்துள்ளார்.
ஜவானின் வெற்றி அட்லீயை தமிழுக்கு விட மறுக்கின்றது. மீண்டும் பாலிவுட்டில் அடுத்த படத்திற்க்கான அச்சாரத்தை போட்டு உள்ளார். ஷாருக்கான் உடன் கூட்டணி சேர்ந்து உள்ள அட்லீயிடம் ஷாருக்கான் ஒரு அன்பு கட்டளையை வைத்துள்ளாராம். அதாவது தமிழ் நடிகரை தன் படத்தில் நடிக்க வைப்பதுதான் அது. யார் அந்த அதிஷ்டசாலி?
நடிகரை விட சிறப்பான தகுதியாக சிரிக்க வைக்கும் முகபாவம், வசன உச்சரிப்பு, டைமிங் சென்ஸ் போன்றவை காமெடி நடிகருக்கு தேவைப்படுகிறது. அது அத்தனையையும் பூர்த்தி செய்து அசுர வளர்ச்சி கண்டு வளர்ந்து வருபவர் யோகி பாபு. நகைச்சுவை தொடர்களில் உதவி இயக்குனராக நடிக்கும் போது கூட்டத்தில் ஒருவராக நின்ற அவர் இன்று கையில் டஜன் கணக்கில் படங்களை வைத்துக் கொண்டு நிற்க நேரமில்லாமல் சென்று கொண்டிருக்கிறார்.
ஷாருக்கான் மற்றும் யோகி பாபுவின் பயணம் சென்னை எக்ஸ்பிரஸ் இல் ஆரம்பித்துவிட்டது. 2021 இந்த வெளிவந்த சிறந்த படங்களின் பட்டியலில் இருந்த யோகி பாபுவின் மண்டேலா படத்தை பார்த்து ஷாருக்கான் வியந்ததாகவும், ஜெயலரில் யோகிபாபு நடிப்பை பார்த்து வயிறு வலிக்க சிரித்ததாகவும் அவரே கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பட விழா ஒன்றில் ஷாருக்கான் யோகி பாபுவை வரவேற்றதையும் கட்டி அணைத்த வீடியோ அதிகமாக வைரல் ஆகியது.
அட்லீயின் அடுத்த ப்ராஜெக்ட் ஆன லயனில் மீண்டும் ஷாருக்கானுடன் கூட்டணி சேருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த லயன் 2026 டிசம்பருக்கு வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பான் இந்தியா மூவியாக உருவாக உள்ள இப்படத்தில் ஷாருக்கான் தன்னுடன் யோகி பாபு நடிக்க வேண்டும் என்று அட்லீயிடம் கண்டிப்புடன் கூறிவிட்டாராம் இதற்காக மூன்று மடங்கு சம்பளம் வேண்டுமானாலும் கொடுத்து விடலாம் என்று டீல் பேசி உள்ளார் ஷாருக்கான். கரும்பு தின்ன கூலி வேண்டுமா?