ரியாலிட்டி ஷோ மூலம் சினிமா வாய்ப்பு வாங்கி விடலாம் என்று ஆசைப்பட்டு வந்த அமுல் பேபி சோசியல் மீடியாவில் பயங்கர அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறார். புசுபுசுன்னு அழகா இருந்த பொண்ணு இப்படி சீக்குவந்த கோழி மாதிரி ஆயிடுச்சே என பலரும் இவரை பார்த்து பரிதாபத்துடன் பேசி வருகின்றனர்.
அந்த அளவுக்கு அம்மணி இப்போது எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறார். சிக்குன்னு உடம்பை குறைத்தால் தான் வாய்ப்பு என யாரோ இவர் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார்கள். அதனாலயே நல்லா இருந்த முகத்தையும் கெடுத்துக்கொண்டு இப்போது அரைகுறை உடையில் அட்ராசிட்டி செய்து வருகிறார்.
அந்த ரியாலிட்டி ஷோ முடிந்த வேகத்தில் ஒன்றிரண்டு படங்களில் நடித்தவருக்கு இப்போது சுத்தமாக வாய்ப்பு இல்லையாம். அதனால் சோசியல் மீடியாவே கதி என கிடக்கும் இவர் கிளாமர் போட்டோக்களை களம் இறக்கி வாய்ப்பு தேடி வருகிறார்.
ஆனாலும் அம்மணியை திரும்பிப் பார்க்கத்தான் யாரும் இல்லை. ஏற்கனவே இளம் நடிகரை காதலிப்பது போல் இவர் ஏமாற்றியது கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது. இதில் இப்படி உள்ளாடை தெரியும் அளவுக்கு இவர் போட்டோ வெளியிடுவது விமர்சனமாகவும் மாறி இருக்கிறது.
இப்படி எல்லாம் செய்தால் மட்டும் வாய்ப்பு வந்துவிடுமா என ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர். ஆனால் எங்கே இவர் பிகினி ரேஞ்சுக்கு சென்று விடுவாரோ என பயந்து போன ரசிகர்கள் யாராவது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா என கதறி வருகின்றனர்.