சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மணிரத்தினத்திடம் கெஞ்சி வாய்ப்பு கேட்ட 2000 கோடி வசூல் ஹீரோ.. இந்த முறை பிளைட்ல ஏறி டான்ஸ் ஆடணும்!

Manirathinam: தான் எடுக்கக்கூடிய படங்கள் விசித்திரமாகவும் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட வேண்டும் என்பதற்காக புத்திசாலித்தனத்துடன் படத்தை எடுக்க கூடியவர் தான் இயக்குனர் மணிரத்தினம். அப்படிப்பட்ட இவருடைய இயக்கத்தில் ஒரு படத்துலயாவது நடித்து விட மாட்டோமா என்று பல முன்னணி இயக்குனர்கள் தவம் இருந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு காரணம் முன்னணி ஹீரோகளுக்கு மணிரத்தினம் கொடுத்த தரமான வெற்றி படங்கள் தான். சமீபத்தில் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் துவண்டு போய் இருந்த திரிஷாவுக்கு குந்தவை கேரக்டர் ஒரு செகண்ட் இன்னிங்ஸ் ஆக கை கொடுத்து தூக்கி விட்டது. இதனை தொடர்ந்து மணிரத்னம் தற்போது கமலை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கி கொண்டு வருகிறார்.

அதே மாதிரி தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் ஷாருக்கானுக்கு உயிரே படத்தை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஷாருக்கான் மிகப்பெரிய ஃபேவரிட் ஹீரோவாக மாறிவிட்டார். அப்படிப்பட்ட ஷாருக்கான் கடந்த ஆண்டு வசூல் மன்னனாக பதான், ஜவான் மற்றும் டங்கி படங்களின் மூலம் கிட்டத்தட்ட 2000 கோடிக்கு மேல் லாபத்தை குவித்திருக்கிறார்.

Also read: தொடர்ந்து பிளாப் கொடுத்தும் ஜெயம் ரவி குவித்து வைத்துள்ள 5 படங்கள்.. அண்ணன் கைவிட்டாலும் தூக்கி பிடிக்கும் மணிரத்தினம்

இது போதாது என்று சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஷாருக்கான் இடம் அங்கு இருக்கும் தொகுப்பாளர் ஒருவர் மீண்டும் நீங்கள் மணிரத்தினத்துடன் படம் பண்ண வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஷாருக்கான் இதுதான் கிடைத்த வாய்ப்பு என்று மணிரத்தினம் சார் உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன். மறுபடியும் உங்களுடன் நான் படம் பண்ணுவதற்கு கதை ரெடி பண்ணுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

அத்துடன் உயிரே படத்தில் தையா தையா பாடலுக்கு ட்ரெயின் மேல் ஆடிய விஷயத்தை ஞாபகப்படுத்தும் விதமாக ஷாருக்கான் சில விஷயங்களை நினைவு படுத்திருக்கிறார். மேலும் இந்த முறை ட்ரெயின் வேண்டாம் விமானத்தின் மேல் ஆடுற மாதிரி வச்சுக்கலாம் என்று கிண்டலாக ஷாருக்கான் கூறினார். அதற்கு மணிரத்தினம் நான் இன்னும் பிளைட் வாங்கல வாங்கினதுக்கு பிறகு நாம் இணையலாம் என்று நகைப்புடன் கூறிவிட்டார்.

உடனே ஷாருக்கான் மணிரத்தினத்திடம் இப்பொழுது எனது படங்கள் போகிற வேகத்தில் பிளைட் வாங்குவது எல்லாம் எனக்கு ஒரு விஷயமே கிடையாது. நீங்கள் சொன்னால் கூடிய விரைவில் அதையும் வாங்கி விடலாம் என்று பதில் கூறியிருக்கிறார். அதற்கு மணிரத்தினம் நானே சொந்தமாக பிளைட் வாங்கிட்டு வருகிறேன். அதன் பிறகு நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என்று ஜாலியாக கூறிவிட்டார். ஆக மொத்தத்தில் மணிரத்தினம் பேசியதை பார்க்கும் பொழுது மறுபடியும் இந்த கூட்டணி இணைய வாய்ப்பில்லை என்பது போல் தெரிகிறது.

Also read: பான் இந்தியா படத்துக்காக மணிரத்தினம் செய்யத் துணிந்த விஷயம்.. சேர்ந்தே ஒத்து ஊதிய கமல்

Trending News