பணம் எல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்ல.. பப்ளிசிட்டிக்காக காசை வாரி இறைக்கும் நடிகை

வளர்ந்து வரும் நடிகைகள் எல்லாம் பட வாய்ப்பு இல்லை என்றால் பப்ளிசிட்டிக்கான வேலைகளில் இறங்கி விடுகின்றனர். அதில் சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட அலப்பறை பண்ணும் பப்ளிசிட்டி பைத்தியங்களும் இருக்கின்றனர்.

அப்படித்தான் இப்போது அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ள நடிகை பப்ளிசிட்டிக்காக ஏகப்பட்ட காசை வாரி இறைத்து கொண்டிருக்கிறாராம். அதிலும் பணம் எல்லாம் எனக்கு ஒரு மேட்டரே கிடையாது என சம்பள காசை கூட இதற்காக அவர் செலவழித்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளது.

அந்த நிகழ்ச்சியை பற்றி அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்திருக்கும் அந்த நடிகை கேமராவுக்காக செய்யும் அலப்பறைகள் ஏராளம். எங்க எதை எப்படி செய்யனும் என தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் அவர் இப்போது ஒரே பாலில் ஏகப்பட்ட சிக்சர்களை அடித்துள்ளார்.

இதற்காக அவரின் குடும்பத்தினர் ஒரு தனி குழுவை அமைத்து சிம்பதி ஓட்டுகளையும் கைப்பற்றி வருகின்றனர். ஆனால் ஏற்கனவே ஒருவர் இதற்காக பணத்தை கொட்டிக் கொடுத்தது மட்டுமல்லாமல் சில பல வேலைகளை செய்து ஆதரவை வாங்கி வருகிறார்.

இப்படி நடக்கும் இந்த போட்டியில் நீயா நானா என்ற மல்யுத்தமும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் பணம் முக்கியம் இல்லை என இறங்கி வேலை பார்த்து வரும் இவர்கள் பப்ளிசிட்டியை தான் டார்கெட் செய்திருக்கின்றனர். அதன் மூலம் வாய்ப்புகளை அள்ளிவிடலாம் என்பதுதான் அவர்களுடைய பிளான்.