சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

லியோவில் பட்ட அசிங்கத்தை GOAT படத்தில் படக்கூடாது.. ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தும் ஏஜிஎஸ்

Actor Vijay’s GOAT movie digital rights and ODD release will be expected at netflix: சினிமாவில் ஒரு படத்தின் வசூலே அந்த படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக செயல்பட்டு வருகிறது. கதையை இரண்டாம் தரமாக வைத்துவிட்டு மிகப் பெரிய பட்ஜெட், பிரம்மாண்ட படைப்பு, அதிகமான கலெக்ஷன் என வர்த்தகத்தை நோக்கிய முன்னணி நடிகரின் படைப்பு அமைந்து விடுகிறது.

கடந்த ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளிவந்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ஆன லியோ எதிர்பார்த்ததை விட வசூலை தெறிக்க விட்டது எனலாம். விக்ரமின் சாதனைக்கு பின் முதலீட்டாளர்கள் லோகேஷ் கனகராஜ் பிளஸ் விஜய் காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆவது கன்ஃபார்ம் என லியோவை எதிர்பார்ப்பிற்கும் அதிகமாக நம்பினர். அதேபோல் லியோ உலக அளவில் 600 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது.

லியோவின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை 125 கோடிக்கு வாங்கினர். இதுவே விஜய் படத்தின் மிகப்பெரிய சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக விஜய் நடிக்கும் கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான அதே ஏஜிஎஸ் ஸ்கெட்ச் போட்டு பக்கவாக பிளான் பண்ணி அதை செயல்படுத்தியும் வருகின்றனர்.

Also read: பேராசையில் தளபதி 68 சம்பளத்தில் செக் வைத்த விஜய்.. தலவிதின்னு ஏஜிஎஸ் 200 கோடி கொடுப்பதன் சூழ்ச்சி

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் கோட். இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. முடிந்த அளவு ஏப்ரலில் சூட்டிங் முடித்து ஜூன் இல் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர் தயாரிப்பு நிறுவனம். படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே படத்தின் ஓ டி டி மற்றும் டிஜிட்டல்  உரிமையின் விற்பனையை துவங்கி உள்ளனர். இதனை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல்.

லியோவை போன்று இந்தியா முழுவதும் என மொத்தமாக கொடுக்காமல், வட இந்தியா தென் இந்தியா என இருபாகமாக பிரித்து கோட் மூவியின் தென்னிந்தியா உரிமையை 125 கோடிக்கும், தென்னிந்தியாவில் ரிலீசான சில மாதங்கள் கழித்து வட இந்தியாவில் ரிலீஸ் பண்ண போவதாகவும் அதற்கான டிஜிட்டல் உரிமை 75 கோடிக்கும் விற்பனை செய்துள்ளது. டிஜிட்டல் உரிமை மட்டுமே 200 கோடிக்கு விற்பனை செய்து லியோவின் ஓ டி டி வசூலை முந்தி உள்ளது விஜய்யின் கோட். படம் வெளிவந்தால் 1000 கோடி அடிப்பது உறுதி.

Also read: விஜய்க்கு ஆப்பு அடிக்க போகும் அஜித்..! கட்டதுரைக்கு கட்டம் சரியில்லன்னு உரைத்த பிரபலம்

Trending News