திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யின் அரசியலுக்கு ஆபத்தை வர வைக்கும் வெங்கட் பிரபு.. படத்தில் நடிக்க வந்தது குத்தமா!

Vijay – Venkatprabhu : விஜய் அரசியலுக்கு இறங்குவதில் உறுதியாக உள்ள நிலையில் இப்போது அதற்கான வேலையை ஒவ்வொன்றாக செய்து வருகிறார். மற்றொரு புறம் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இருந்து உருவாகி வரும் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீலங்காவில் நடந்து வருகிறது.

இப்போது மொத்த படக்குழுவும் ஸ்ரீலங்காவில் தான் மையம் கொண்டிருக்கிறது. இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ஸ்ரீலங்காவில் உள்ளவர்கள் மிகவும் நெருக்கமாம். மேலும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் படத்தை எடுக்க வெங்கட் பிரபு ஆசைப்பட்டார்.

அப்படி எடுத்தால் தமிழ் மக்களால் பிரச்சனை வரும் என்பதால் அதை கைவிட்டார். இப்போது கோட் படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்து வருகிறது. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்க அங்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் விஜய் ஒரு சிக்கலில் மாட்டியிருக்கிறார். மரியாதை நிமித்தமாக விஜய் ராஜபக்ச குடும்பத்துடன் பார்டியில் கலந்து கொண்டால் அது பிரச்சினையாக மாறும்.

Also Read : இங்கிலீஷ் டைட்டில் வச்சா இப்படித்தான் சிக்குவீங்க! விஜய் தலையில் இடியை இறக்கிய வெங்கட் பிரபு

அதேபோல் அவரே சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டாலும் விஜய்யை தமிழ் மக்கள் வெறுத்து விடுவார்கள். விஜய் இந்த காரணத்தினால் ராஜபக்சேவை சந்திக்கவில்லை என்றால் ஸ்ரீலங்காவில் கோட் படம் கூடாது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இக்கட்டான சூழ்நிலையில் விஜய் இருக்கிறார்.

இவ்வாறு விஜய் அரசியலில் ஆரம்ப புள்ளியே வைக்காத நிலையில் தலையில் இடியை இறக்கும்படி வெங்கட் பிரபு செய்து இருக்கிறார். உன் படத்துல நம்பி நடிக்க வந்தது ஒரு குத்தமா என்ற மைண்ட் வாய்ஸில் தான் இப்போது விஜய் இருக்கிறார். விஜய் இதை எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Also Read : பேராசையில் GOAT படத்திற்கு வந்த ஆபத்து.. உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா கதை தான்!

Trending News