புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பல்லு போற வயசுல 5 பெருசுகள் பண்ணிய ரவுசுகள்.. இன்னும் 60 வயசு ஆகல என சப்பை கட்டு கட்டிய கில்லி

5 Tamil celebrities who got married beyond marriageable age: தலைப்பிற்கு ஏற்றார் போல் திருமண வயதை கடந்த பின்பும் முதுமையிலும் தனக்கு  ஒரு துணை வேண்டும் என தமிழ் பிரபலங்கள் பலரும் வயதை கணக்கில் கொள்ளாமல் தன்னைவிட வயது குறைந்த பெண்களை காதலித்து திருமணம் செய்துள்ளனர் அவர்களில் சிலர்

ஜெமினி கணேசன்: காதல் மன்னன் என்ற பெயருக்கு ஏற்றவாறு நிஜ வாழ்விலும் காதல் மன்னன் ஆகவே வலம் வந்தார் ஜெமினிகணேசன். அலமேலு, புஷ்பவல்லி, சாவித்திரி என மூன்று திருமணத்திற்கு பின்னரும் 79 வயதில் தனது செகரட்டரியான 36 வயது ஜூலி என்பவரை நான்காவது முறையாக திருமணம் செய்தார் ஜெமினி.

வேலு பிரபாகரன்: 30 வருடங்களுக்கு மேலாக ஒளிப்பதிவாளராக பணியாற்றிய 60 வயதான வேலு பிரபாகரன் “ஒரு இயக்குனரின் காதல் டைரி” என்ற திரைப்படத்தை இயக்கினார் திரைப்படத்தில் நடித்த ஷெர்லி தாஸ் என்ற முப்பது வயது  நடிகையை திருமணம் செய்தார்.

பிரகாஷ்ராஜ்: டூயட் மூலம் தமிழில் அறிமுகமான பிரகாஷ்ராஜ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளிலும் மிரட்டும் வில்லனாகவும் குண சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.  டிஸ்கோ சாந்தியின் சகோதரி லலிதா குமாரியை திருமணம் செய்து வெற்றிகரமாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென செட்டாகாது என்று கூறி 2010 போனி வர்மாவை திருமணம் செய்து 11 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் மகனுக்காக மோதிரம் மாற்றி புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

Also read: 50 வருடமா சினிமாவிற்காக ஓடிக்கொண்டிருக்கும் 5 நடிகர்கள்.. கொல செய்ய நினைத்தவரையே கொண்டாடிய கமல்

ஆசிஷ் வித்யார்த்தி: விஜய் நடித்த கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி  இவர் முதல் மனைவி பில்லு என்பவரை விவாகரத்து செய்து கடந்த ஆண்டு மே மாதம் உடை வடிவமைப்பாளரான ரூபாளி பருவா என்பவரை  இரண்டாம் முறையாக திருமணம் செய்தார். நிருபர் ஒருவர் 60 வயதில் உங்களுக்கு இந்த கல்யாணம் தேவையா என்று கேட்டதற்கு, தேவை என்பதால் பண்ணிக் கொள்கிறேன் எனக்கு இன்னும் 60 வயது ஆகவில்லை என்று சப்பை கட்டு கட்டினாராம்.

ஆர்யா: 46 வயது வரை முரட்டு சிங்கிளாக இருந்த ஆர்யா, பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர் கடைசியில் தனியார் தொலைக்காட்சியில் பெண் தேடும் அளவிற்கு இறங்கினார் அதில் பங்கேற்ற பெண்களின் மனதை கஷ்டப்படுத்த விரும்பாமல் திருமணத்தை நிராகரித்த அவர், கடைசியில் ஒரு வழியாக கஜினிகாந்த் படத்தில் தன்னுடன் நடித்த வயதில் குறைந்த சாய்ஷாவை காதலித்து திருமணம் புரிந்தார்.  தற்போது இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.

Also read: கவர்ச்சி நடனத்துக்காக வளர்த்து விட்ட 6 நடிகைகள்.. டிஆர் கண்டுபிடித்த அந்த பால் கொழுக்கட்டை!

Trending News