பொதுவாக நடிகைகள் தொழிலதிபர், தயாரிப்பாளர்கள் ஆகியோரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த சூழலில் தமிழில் புகழ்பெற்ற நடிகை ஒருவர் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கும் அவருக்கு வாய்ப்பு எக்கச்சக்கமாக குவிய ஆரம்பித்தது.
சினிமாவில் கோடிகளை சம்பாதித்தாலும் சீக்கிரம் பணக்காரர் ஆக வேண்டும் என்று நடிகைக்கு ஆசை வந்தது. இதனால் அங்கு பிரபலமாக இருக்கும் தயாரிப்பாளர் ஒருவரை நடிகை வளைத்துப் போட்டிருக்கிறார். திருமணத்திற்கு முன்பே இவர்கள் இருவரும் சுற்றாத இடமே இல்லையாம்.
மேலும் தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விவாகரத்து ஆனவர். அது தெரிந்தும் நடிகை அவரது சொத்துக்கு ஆசைப்பட்டதால் அவர் பின்னால் சுற்றி இருந்தார். இந்த விஷயம் நடிகையின் வீட்டுக்கு தெரிய வர பிரச்சனை பெரிதாகி விட்டது. அதன்பிறகு தயாரிப்பாளரையே நடிகை திருமணம் செய்து கொண்டார்.
அதுவும் நடிகை மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் கிட்டத்தட்ட 15 வயதுக்கு மேல் வித்தியாசமாம். அழகு, திறமை இருந்தும் நடிகை இவ்வாறு விபரீத முடிவு எடுத்துவிட்டார் என்று அப்போது பேசப்பட்டது. ஆனால் நடிகை தயாரிப்பாளருடன் சந்தோஷமாகத் தான் வாழ்ந்து வந்தார்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நடிகை குறைத்துக் கொண்டார். கணவர், குழந்தை ஆகியோரை கவனித்து வந்தார். ஆனால் அதன் பிறகு சில வருடங்களிலேயே தயாரிப்பாளர் மற்றும் நடிகை இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.