Top 5 serial in TRP rating list: புது வருடத்தில் டிஆர்பி-யில் 5 சீரியல்கள் அடித்து நொறுக்குகிறது. அதிலும் இந்த வாரம் சுவாரசியமே இல்லாமல் இருந்த சீரியலை நான்காவது இடத்திற்கு துரத்தி விட்டனர். ஆனால் இந்த சீரியல் தான் போன வருஷத்தின் துவக்கத்தில் முதலிடத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 5-வது இடத்தில் கலெக்டராக மாஸ் காட்டும் சுந்தரி இருக்கிறது. அதிலும் இதில் இரண்டு குட்டி வாண்டுகளுடன் சேர்ந்து சுந்தரி சீரியலை கூடுதல் விறுவிறுப்பாக்குகிறார். இதைத்தொடர்ந்து 4-வது இடம் எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்துள்ளது. இந்த சீரியல் தான் 2023ன் துவக்கத்தில் முதலிடத்தில் இருந்து மாஸ் காட்டிக் கொண்டிருந்தது.
ஆனால் மாரிமுத்துவின் இறப்பு, அதன் தொடர்ச்சியாக கதையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இரண்டு வருடங்களாக உருட்டின கதையவே உருட்டிக்கிட்டு இருப்பதால் சின்னத்திரை ரசிகர்கள் வெறுத்துப் போனார்கள். இதன் தொடர்ச்சியாக டிஆர்பி-யில் 3-வது இடம் அண்ணன் தங்கையின் பாசத்தை அழகாக காண்பிக்கும் வானத்தைப்போல சீரியலுக்கு கிடைத்துள்ளது.
Also Read: மகேஷ் பாசத்துக்கு அடிமையாகி காதலில் விழுந்த ஆனந்தி.. கேள்விக்குறியாக நிற்கப் போகும் அன்பு
டிஆர்பி-யில் டாப் 5 இடத்தைப் பிடித்த சீரியல்
இதில் தங்கையின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக அண்ணன் செய்யும் தியாகம் பார்ப்போரை உருக வைக்கிறது. 2-வது இடம் குடும்பத்திற்காக பல கஷ்டங்களை சுமந்த கயல் இப்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என மொத்த குடும்பமே விழி பிதுங்கி நிற்கிறது.
இதைத் தொடர்ந்து முதலிடம் சில மாதங்களுக்கு முன்புதான் துவங்கப்பட்ட சிங்கப்பெண்ணே சீரியலுக்கு கிடைத்துள்ளது. இதில் சில்வண்டு போல் இருக்கும் ஆனந்தி தனக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்களிடம் சிங்கம் போல் கர்ஜிக்கிறார். இதனால் இதன் டிஆர்பி-யும் நாளுக்கு நாள் பிச்சிக்கிட்டு போகுது.
Also Read: விஜயாவை ஆட்டிப்படைக்கும் பாட்டி.. கழுவுற தண்ணில நழுவுற மீனாக எஸ்கேப்பாகும் ரோகினி