வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

சலார் ஓடிடி ரிலீஸ் தேதி.. பாகுபலிக்கு பின் ஹிட் கொடுக்க முடியாமல் திணறும் பிரபாஸ்

Salaar Movie OTT Release Date: தென்னிந்திய நடிகர் ஆன பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான சலார் திரைப்படம், கடந்த மாதம் 22ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. கேஜிஎஃப்-க்கு பின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனம் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது.

இந்த படம் ரிலீஸ் ஆன ஒரே மாதத்திற்குள் இப்போது ஓடிடி-யிலும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. சலார் திரைப்படம் எப்போது ஓடிடி-யில் வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. பிரபாஸ், பாகுபலி படத்தில் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக பார்க்கப்பட்டார்.

இருந்தாலும் இவரால் பாகுபலி படத்திற்கு பிறகு ஒரு வெற்றி படத்தை கூட கொடுக்க முடியாமல் திணறுகிறார். இருந்தாலும் கடந்த மாதம் வெளியான சலார் கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. சலார் திரைப்படத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் 140 கோடி கொடுத்து வாங்கியது.

Also Read: சலார் படத்தை ஓவர் டேக் செய்த அஜித்தின் தம்பி.. 270 கோடி படத்தை தூள் தூளாக்கிய சின்ன பட்ஜெட் படம்

ஓடிடி-யில் வெளியாகும் சலார் திரைப்படம்

இதனால் சலார், நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜனவரி 20ஆம் தேதி ஆன நாளை ரிலீஸ் ஆகிறது. இன்று நள்ளிரவு முதல் சலார் படத்தை ஓடிடி-யில் பார்க்க முடியும். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் மட்டும் ஓடிடி-யில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஆனால் ஹிந்தியில் மட்டும் வெளியாகவில்லை. ஏற்கனவே பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பின் நடித்த ராதே ஷ்யாம், சஹோ, ஆதி புருஷ் போன்ற படங்களுடன் சலார் திரைப்படத்திற்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தோல்வியை தழுவியது. இதனால் தற்போது பிரபாஸ் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்.

Also Read: KGF இயக்குனரால் தல தப்பிய பிரபாஸ்.. பாக்ஸ் ஆபிஸை திணறடிக்கும் சலார் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Trending News