Dhanush : அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் சினிமா பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது முன்னாள் மருமகன் தனுஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தனுஷ் கலந்து கொண்டது தவறு என பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார்.
அதாவது சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி தனது யூடியூப் சேனலில் இது குறித்து பேசி இருக்கிறார். அதாவது முழுமையாக கட்டி முடிக்காத ராமர் கோயில் அவசரமாக குடமுழுக்கு செய்வதற்கான காரணம் அரசியல் தான் என்று கூறி இருக்கிறார். 2024 தேர்தலுக்காக தான் பாஜக இப்போது ராமர் கோயிலை திறந்து இருக்கின்றனர்.
மேலும் ராமர் கோயிலை ஆயுதமாக பயன்படுத்தி 2024 ஆம் ஆண்டு அதிக வாக்குகளை பெற வேண்டும் என்ற திட்டத்தில் இவ்வாறு செய்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் ரஜினியை அழைக்க காரணம் அவர் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு வந்தால் அவரது ரசிகர்களும் இதற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதுதான்.
Also Read : நடிகர் சங்கத்திற்கு பணம் தர யோசிக்கும் ரஜினி.. வாய் வார்த்தையுடன் நிறுத்திக் கொண்ட விஷால்
ஆனால் இந்த விழாவில் தனுஷ் கலந்து கொண்டது மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக பிஸ்மி கூறி இருக்கிறார். அதாவது முதல் குடிமகனான ஜனாதிபதி திரௌபதி முர்முவை பிரதமர் மோடி அழைக்கவில்லை. அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் இந்த விழாவுக்கு அழைக்கவில்லை.
இதே போல் தீண்டாமை கொள்கை பாஜகவால் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடமும் காட்டி உள்ளது. 2020 ஆம் ஆண்டு ராமர் கோயிலின் பூமி பூஜையின் போதும் ராம்நாத் கோவிந்தை அழைக்கவில்லை. அதேபோல் டெல்லியில் பாராளுமன்றம் அடிக்கல் நாட்டிய போதும் இவரை அழைக்காமல் தீண்டாமையை பின்பற்றியது.
மேலும் பாராளுமன்ற திறப்பு விழாவிலும் ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைக்கவில்லை. ஆனால் இப்போது அரசியல் காரணத்திற்காக தனுஷை பாஜகவினர் அழைத்துள்ளனர். தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டு தீண்டாமைக்கு துணை போய் உள்ளதாக பிஸ்மி ஆவேசமாக பேசி இருக்கிறார்.
Also Read : அயோத்தி பக்கம் அத்தனை கோடிகளை வளைத்த அமிதாப்.. ரஜினி முதல் இப்பவே வளைக்கப்படும் விஐபிகள்