சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பெயரை கெடுத்து கந்தலாக்கிய ராஷ்மிகா மந்தனா.. பத்து முறை கடித்து குதறிய நடிகரால் நிஜ வாழ்க்கையில் சர்ச்சை

Rashmika Mandhana who tarnished her name in Animal Movie: “நேஷனல் க்ரஷ்” என்று அழைக்கப்படும் கன்னடத்து பைங்கிளி ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு தமிழ் என தென்னிந்தியாவை ஒரு கலக்கு கலக்கி விட்டு அனிமல் படத்தின் மூலம் பாலிவுட்டில் தஞ்சம் புகுந்தார். தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து சம்பாதித்த நற்பெயரை பாலிவுட்டின் ஒரே படத்தின் மூலம் இழந்தார் ராஷ்மிகா மந்தனா.

தமிழில் கார்த்தி உடன் சுல்தான் படத்தில் ஹோம்லி லுக்கில் வந்து போன ராஷ்மிகாவை ஜொள்ளு விடாத இளசுகள் கிடையாது. அந்த அளவு வசீகர தோற்றத்துடன் இளசுகளை  கிரங்கடித்து இருந்தார் ராஷ்மிகா. புஷ்பா படத்தில் ஸ்ரீ வள்ளி கேரக்டர் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமான ராஷ்மிகா.

கடந்த ஆண்டு விஜய்யுடன் இவர் இணைந்த வாரிசு திரைப்படம் வசூலில் நல்ல வெற்றி பெற்றதுடன், இவருக்கும் நல்ல ஒரு சிறப்பு பெயரை வாங்கித் தந்தது. எதார்த்தமான நடிப்பு மற்றும் இவரது வெகுளித்தனமான குணங்களால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார் ராஷ்மிகா. இப்படி குடும்ப குத்து விளக்காக நடித்து வந்தவர் பாலிவுட்டில் செய்த வேலை அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.

Also read: விஜய்யிடம் வித்தியாசமாக நடந்து கொள்ளும் ராஷ்மிகா மந்தனா.. தளபதி 66 என்ன ஆகப்போகுதோ

அனிமல் படத்திற்காக ரன்பீர் கபருடன் இணைந்தார் ராஷ்மிகா மந்தனா. கடந்த டிசம்பர் அன்று வெளியான இத்திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும் வசூலில் 900 கோடியை தொட்டு சாதனை  புரிந்தது. வழக்கமாக மூன்று கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ராஷ்மிகா. பாலிவுட் போனதும் தனது சம்பளத்தை 6 கோடி முதல் 7 கோடியாக உயர்த்தினார்.

சமீபத்தில் அனிமல் படம், பதிப்பு  நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒன்பது நிமிட காட்சியுடன் சேர்த்து ஒடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. ராஷ்மிகாவிற்கென்று இதனை பார்த்த குடும்பத்தினர்கள் முகம் சுளித்தனர். படுக்கை அறை மற்றும் முத்த காட்சிகள் அருவருக்கத் தக்க வகையில் குடும்பத்துடன் பார்க்க முடியாமல் இருந்ததே காரணம்.

rashmika-animal

பத்து முறை தெளிவாக காட்டும் லிப் கிஸ் என முத்தக்காட்சியால் முகம் சுளிக்க வைத்த ராஷ்மிகாவை குடும்பங்கள் பலவும் திட்டி தீர்த்து உள்ளது. சமீபத்தில் விஜய் தேவ கொண்டா உடனான காதலும், நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது எனவும் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இது தேவைதானா என்று கேள்வி எழுப்பி உள்ளனர் தென்னகத்து ரசிகர்கள்.

மேலும் பேட்டி ஒன்றில் இந்த மாதிரியான படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது என ராஷ்மிகா மந்தனாவின் அலட்டல் வேறு. அனிமல் படத்திற்கு பின் இந்த சர்ச்சை விவகாரம் நிஜ வாழ்க்கையிலும் எதிரொலிப்பதாக தெரிகிறது. நிச்சயதார்த்தம் பற்றிய பேச்சு வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வராமல் தாமதமாகிறது ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவின்  இணைவு.

Also read: மானாவாரியாக லிப் லாக் கொடுத்த ராஷ்மிகா.. கோடிகளை கொட்டிய அனிமல் தயாரிப்பாளர்

Trending News